பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


உலகத்தில் முதல் முதலாகப் புரட்சிக் கொடி தூக்கிய பரம்பரையில் வந்தவர்கள் நாம் என்பதை அமெரிக் கர்கள் மறந்துவிடக் கூடாது. அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் எப்பகுதியிலும் சரி, மக்களுடைய உரிமையையும், அவர்கள் நல்வாழ்வையும் பாதுகாப்பதை நாம் நமது கடமை யாகக் கருதவேண்டும். மக்கள் உரிமை அழியாமல் என்றும் வாழ்வதற்கு நாம் எந்தக் கடமையையும் ஏற்போம் எந்தத் துன்பத்தையும் பொறுத்துக்கொள்வோம் ; எந்த நண்பரை யும் ஆதரிப்போம்; எந்த எதிரியையும் எதிர்ப்போம். நம்பால் நல்லெண்ணம் கொண்டிருக்கும் நாடுகளும் சரி, நாம் அழிந்து விடவேண்டும் என்று எண்ணும் நாடுகளும் சரி, இ ைத அறிந்து கொள்ளட்டும்.

எங்களுக்குப் பண்பாட்டையும், ஆன்மிகக் கொள் கைகளையும் நல்கிய பழம்பெரும் நேசநாடுகளுக்கு நாங்கள் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிருேம். நாம் ஒன்றுபட்டால் இவ்வுலகில் நடக்காத செயல் எதுவுமில்லை ; நாம் பிரிந்து நின்றல், ஆற்றல் மிக்க அ ைற கூ வ ல் க ளே எதிர்க்கத் திறனின்றிச் சிதைந்து போவோம்.

உலகின் பல பகுதிகளிலும் புதிதாகச்சுதந்திரம் பெற்று முன்னேறும் நாடுகளே இருகை நீட்டி வரவேற்கிருேம். அவர் களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை இதுதான். நீரிலிருந்து தப்பி நெருப்பிற்குள் பாய் வ து அறிவுடைமை ஆகாது. மாற்ருர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுச் சர்வாதிகார ஆதிக்கத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. எங்களை ஆதரிக்க வேண்டுமென்று நான் அவர்களைக் கேட்கவில்லை. ஆகுல் அவர்களுடைய சுதந்திரத்தைச் சி ைதயா ம ல் காத்துத் கொள்ளவேண்டும். என்று அவர்களுக்குக் கூறுகிறேன். புலியின் முதுகில் ஊர்ந்து செல்பவன், என்ருவது ஒருநாள் புலிக்குத்தான் இரையாக வேண்டும். அதுபோல் முறையற்ற அரசியல் என்றும் நிலைத்திருப்பதில்லை.