பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


ஐயத்தை அகற்றிவிட்டு வாருங்கள் ! வலியவன் நேர்மையுள்ளவனாகவும் எளியவன் பாதுகாப்புள்ளவனுகவும் வாழக்கூடிய, அமைதியான ஒரு புத்துலகத்தைச் சமைக்க முயன்று பார்ப்போம்.”

" நாம் துவக்கிவைக்கும் இப்புது முயற் சி இன்னும் நூறு நாட்களில் மு ற் று ப் பெ ரு ம ல் போகலாம் ; அல்லது ஆயிரம் நாட்களில் முற்றுப் பெருமல் போகலாம். ஏன் ? நம் ஆயுட் காலத்திலே கூட முற்றுப் பெருமல் போகலாம். அதற்காக நாம் தயங்க வேண்டியதில்லை. நாம் இம்முயற் சியைத் தொடங்கி வைப்போம்.”

' அமெரிக்கக் குடிமக்களை நான் அறைகூவி அழைக் கின்றேன். இம்மகத்தான முயற்சி வெற்றியோ தோல்வியோ பொறுப்பு, என்னைவிட உங்க ள் கையில்தான் மீகுதியாக இருக்கிறது. இவ்வமெரிக்க நாடு தோன்றிய நாள் தொட்டுத் தங்கள் நாட்டுப்பற்றைக் காட்டுவதற்காக அமெரிக்க மக்கள் பலமுறை அறைகூவி அழைக்கப்பட்டிருக்கின்றனர். உலக மெங்கும் பரவிக்கிடக்கும் அமெரிக்க வீரர்களின் கல்லறைகள் அவர்கள் நாட்டுப் பற்றுக்குச் சான்று பகரும்.

அமெரிக்க இளைஞர்களே ; சங்கநாதம் உங்களை நோக்கி முழங்குகிறது. -

படைக்கலன் தாங்குவதற்காக நான் உங்களே அழைக்கவில்லை ; ஆனல் அளவற்ற படைக்கலன்களை நாம் பெற்றிருக்கிருேம்.” -

" போர்க்களத்தில் அணிவகுத்து நிற்பதற்காக நான் உங்களை அழைக்கவில்லை. ஆனல் நாம் போருக்கும் ஆயத்த மாக இருக்கிருேம்.”

as–9