பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


முன்னேற்றம் இன்று அழிவு ஆற்றல்களே யெல்லாம் கட்ட விழ்த்து விட்டிருக்கிறது. மக்களினத்திற்குத் திட்டமிட்ட அழிவோ, அல்லது எதிர்பாராத அழிவோ எந்நேரத்திலும் ஏற்படலாம். இந்த அச்சத்தைப் போக்கி, உலகில் அமை தியை நிலைநாட்டும் பணியில் அவர்களேத் தோள் கொடுக்கு மாறு வேண்டுகிறேன். இவ்வேண்டுகோள் அ ச் ச த் தி ன் அடிப்படையிலோ, அல்லது எங்கள் வலிமைக் குறைவின் அடிப்படையிலோ தோன்றவில்லை. எங்கள் படைவலிமையை ஐயமறத் தெளிந்தறிந்த நிலையிலேயே நாங்கள் இந்த வேண்டு கோளே விடுக்கிருேம். - எதிரெதிர் அணியில் நிற்கும் வல்லரசுகள், தங்களைச் சூழ்ந்திருக்கும் இப்போதைய நெருக்கடி நிலைமையை மேலும் மேலும் வளர்க்க வி ரு ம் ப ம ன ட் டா என்பதை நாங்கள் அறிவோம். இருதரப்பினரும் அணு ஆயுதங்களின் பொருட்டு அளவற்ற பொருட் செலவை மேற்கொண்டிருக்கின்றனர். வான மண்டலத்தில் அணு ஆயுதச் சோதனையால் நச்சுப் பொருள் மிகுந்து வருகின்றது என்பதை இருதரப்பினரும் உணருகின்றனர். மூன்ரும் உலகப்போர் நேர்வதற்குரிய நெருக்கடிகளைப் போக்க இருதரப்பாரும் முயன்றுகொண்டு தான் இருக்கின்றனர். நாணயமும், மரியாதையும் அச்சத் தின் அடிப்படையில் தோன்றியவை அல்ல. நாம் அச்சத் தால் ஒன்று சேரவேண்டும். ஆல்ை ஒன்று சேர அச்சப் படவும் வேண்டாம். நம்மைப் பிரித்து வைக்கும் வழி வகை களே ஆராய்வோம். எதிரணியில் திரண்டிருக்கும் நாம் ஒன்று கூடிப்படைக் குறைப்பான உறுதிமொழி மேற்கொள்வோம். உலக நாடுகளின் ஒன்றுபட்ட ஆற்றலால் மற்ற தீய ஆற்றல் களைக் கண்டறிவதைவிட, ஆக்க ஆற்றல்களைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவோம்.

  • நாம் ஒன்றுகூடி விண்ணிலுள்ள கோள்களே ஆராய் வோம் ; பாலைவனங்களைச் சோலை வனங்களாக்குவோம் ; பிணிகளே உ ல கி ல் இல்லாமற்செய்வோம் ; கடலை வளப் படுத்துவோம்; கலையை வளர்ப்போம்; வாணிகத்தைப் பெருக் குவோம் ; ஏழ்மையைத் துரத்துவோம் : அ டி மை ைய அகற்றுவோம். - -