பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


போல் அமெரிக்கர்கள் அடித்து நொறுக்கிவிடுவார்கள் ; அடி பட்டு இறந்தால் வெறிநாயை வீதியோரத்தில் எறிவதுபோல் இவர்களையும் எறிந்துவிடுவார்கள். கணவன், மனைவி, மக்கள் என்றும் பாராது இவர் க ளே ப் பிரித்துப் பணத்திற்காகத் தொலை தூரத்தில் விற்றுவிடுவதுமுண்டு. அமெரிக்க நாடு பொன்னுடாக மாறியதற்கு இக்கருப்பர்களே அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம்.

இக்கொடிய அடிமை வாணிகத்தைப் போராடி ஒழித் தவர் நூருண்டுகளுக்கு முன் அமெரிக்கத் தலைவராயிருந்த அப்ரகாம் லிங்கன் என்பவர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் மா நி ல ங் க ள் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவை. அம்மாநிலங்கள் அ டி ைம வாணிகத்தை ஆதரித்தன ; அடிமை வாணிக்கத்தைச் சட்டத்தின் மூலம் தடை செய்ய முன்வந்த அமெரிக்க ஐக்கிய நாட்டினின்று தனியாகப் பிரிந்து நின்று, படை திரட்டிப் பெரும் போர் செய்தன. இறுதியில் மனிதப் பண்பே வெற்றிபெற்றது. அடிமை வா னி க ம் அடியோடு ஒழிக்கப்பட்டது. ஆனல் இக்கொடுமையை ஒழித்துக்கட்டிய பெரியார் அப்ரகாம் லிங்கன், பூத் என்ற நடிகன் ஒருவல்ை நாடக அரங்கில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்க நாட்டில் அடிமை வாணிகம் ஒழிக்கப்பட் டாலும், கறுப்பர்கள் சமூக வாழ்வில் ஒதுக்கி வைக்கப்பட்டு மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர் ; பொதுவிடங்களிலும், நடைபாதைகளிலும், கல்லூரிகளிலும், படக்காட்சி கொட்ட கைகளிலும், உணவு விடுதிகளிலும் ஒ து க் கி வைக்கப்பட் டனர். வெள்ளேயர்கள் பெறும் உரிமைகளையும், சலுகை களையும் இவர்கள் பெற முடியாமல் போய்விட்டது. அதனல் அறிவும் ஆற்றலும் .ெ ப ற் ற நீக்ரோ இளைஞர்கள் முறைப்படி கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.

கெ-10