ஏ. வி. பி. ஆசைத்தம்பி நினைவு வந்துவிட்டதா கமலா? கல்லூரி வாழ்வே இன்பமானது தான்; அதிலும் கல்லூரி வாழ்வில் காதல் சேர்ந்துவிட்டால்.. கேட்கவேண்டுமா? என் காதலர்...... அதுதானடி கேசவ்... நினைவு வந்துவிட்டதா? நினைவு வராமல் என்ன செய்யும்? நான் என்று நினைத்து, உன் முதுகிலே கேசவ் தட்டியதை உயிர் உள்ள வரை நீ மறக்கமுடியுமா? அந்தக் காதலர்...? கமலா, எனக்கு வெட்கமாய் இருக்கிறதடி. அவருக் கும் எனக்கும்... கமலா, சொல்லட்டுமா... கல்யாணமுடி கல்யாணம்! நீ ஆச்சரியப்படுவாய்! என் காதல் நிறைவேறாது என்று நீ சொல்லாத இரவு பாக்கியுண்டா? 'கனவில் கண்ட காதலனை மனோன்மணி அடைந்திருக் கிறபோது, கண்முன் கண்ட காதலனை எப்படியும் அடை வேன்' என் எறு நான் உறுதியாகச் சொன்னேன். காட்டில் கண்ட காதலனை சகுந்தலையால் அடைய முடியவில்லை' நீ திரும்பிக்கூறி வெற்றி பெற்றவளைப்போல பூரித்தாய். இப்போது என்னடி சொல்லுகிறாய்? என் கேசவ் என்னை மணக்கப் போகிறார். நேற்று தான் ஜோதிடர் வீட்டுக்கு வந்தார். என் சாதகத்தையும் கேசவ் சாதகத்தையும் பார்த்தார். சாதகப் பொருத்தம் பிரமாதம் என்று அவர் வாயாலேயே சொன்னார். அப்பா அதைக் கேட்டு ஆனந்தத்தில் அப்படியே மூழ்கிவிட்டார். அந்த சோதிடருக்கு இனா மாகஒரு 14
பக்கம்:கேட்கவில்லை.pdf/15
Appearance