உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒரே இரவு ! ரூபாய் அதிகமாகவும் கொடுத்தார். அவரேதான் முகூர்த் தத்துக்கு நாளும் குறித்தார். அந்த நாள்... சீக்கிரம் வரமாட்டேன் என்று சத்தியாக் கிரகம் செய்கிறதடி. ஹாஸ்டலிலே இருக்கிற மாணவர் கள் வீட்டுக்கு செல்லும் விடுமுறைக்கும் - சிறையிலே இருக்கிற கைதிகள் விடுதலைக்கும்- விரல்களை மடக்கிக் கொண்டு இருப்பதுபோல-விதவிதமான கற்பனையை தினம் ஒன்றாகச் செய்துகொண்டிருக்கிறேன். வேறு என்ன செய்யமுடியும்? இதைத்தவிர நான் 'ஏன் டிரங்கு பெட்டியில், துணிகளுக்கடியில் அவர் போட்டோ ஒன்றுதான் ஒளித்துவைத்திருக்கிறாயே, அதை சதா பார்த்துக்கொண்டு, "பர்த்தாவே! என் காதல் தெய் வமே! என்று பூஜை செய்கிறதுதானே என்று நீ என்னைக் கேட்கக் கூடியவள்தான். 12 ஏண்டி! காலை மாலை நீ கோயிலுக்குப் போகிறாயே எதற் காக? கடவுளை வணங்கத்தானே? நான்உன்னை கேட்கி றேன். தூணிலும் துரும்பிலும் நீ தேடுகிற கடவுள் இருக் கும் போது எதற்கடி கோயிலுக்கு போகிறாய்? துரும்புக்கும் தூணுக்கும் துதி பாடிக்கொண்டு வீட்டிலே இருக்கலாமல் லவா ? இப்படி நீ இருப்பாயா? இப்போது சொல்லடி: என் கேசவை போட்டோவில் பார்ப்பதைவிட... தினம் ஒரு தடவையாவது நேரில் பார்த் தால் ........ அந்த இன்பத்தை எழுத முடியுமா? சொல்ல முடியுமா? 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/16&oldid=1735753" இலிருந்து மீள்விக்கப்பட்டது