ஏ . வி .பி . ஆசைத்தம்பி ரிப்பேர் செய்யப் பட்டு, மின் விளக்குகளால் நன்கு அலங் கரிக்கப்பட்டது. விமலா வீட்டெதிரே பெரிய பந்தல் போடும் வேலையும் ஆரம்பமாயிருந்தது. உற்றார், உறவினர் நண்பர்கள் மற்ற வர்களுக்கு விருந்தை நடத்த தனி ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்தது. விருந்தினர் ஒவ்வொருவராக வந்து சேர்ந்துகொண் டிருந்தனர். எதிரில் ஒரு வீட்டை சம்பந்தியர்கள் தங்க விமலா தந்தை ஏற்பாடு செய்திருந்தார். கமலா எழுதிய படி கேசவ் வீட்டார் இரண்டு தினங்களுக்கு முன்பே வந்து சேர்ந்தனர். கமலாவும் அன்று மாலையே வந்து சேர்ந்தாள். 'நாளை காலையில் உன் கேசவ் வருவதாக சொன்னாரடி' என்று விமலாவிடம் ரகசியமாக சொன்னாள் கமலா. "வேறு என்னடி சொல்லி விட்டார்?" என்று வெட் கப்பட்டபடி கேட்டாள் விமலா. "சொல்ல வேண்டியதை 'முதல் இரவு' அன்று சொல் வாராம்" என்று கிண்டலாக சொன்னாள் கமலா. விமலாவுக்கு அன்று பொழுது போவதே கஷ்டமாக இருந்தது. கமலாவோடு பேசிப்பேசி பொழுதை எப்படியோ கழித்தாள், மறுநாள் விடிந்ததும் விமலா கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தாள். பகல் பன்னிரண்டாகியும் கேசவ் வந்துசேரவில்லை. 22
பக்கம்:கேட்கவில்லை.pdf/23
Appearance