ஒரே இரவு! அன்பே! ஏழு வருடங்களுக்குப்பின் மாலைதான் விடு தலை அடைந்தேன். நாளை சூரியோதயத்தில் இன்னொரு குற்றத்திற்காக என்னை கைது செய்ய சட்டம் காத்திருக் கிறது என்றான் காதலன். புழுப்போல் துடித்தாள் அந்தப் புண்ணியவதி. அதற் காக ஆதவன் அயர்ந்து தூங்கிவிடுவானா? ஆதவனைக் கண் டதும் போலீஸார் காதலனைக் கைது செய்கிறார்கள். இதுதான் விமலா ஒரே இரவு! உனக்குப் பரிசளிக்கப்படும். ஆனால் இரவு ஆயிரக்கணக்கான இரவுகளை இந்த 'ஒரே இரவு* உன்னுடைய ஒரே முத்தங்களை உண் டாக்கட்டும் என்று முழுமுதற் கடவுளை தினமும் பிரார்த் தனை செய்கிறேன். எவரெஸ்டில் ஏறியதற்காக டென்சிங் உலகமெல்லாம் பாராட்டும்போது, என் தோழியின் காதல் நிறைவேறுவதை என் உள்ளம் வேண்டாதா? விமலா, இங்கு உன் கடிதம் கிடைத்தபிறகு உன் மாமி வீட்டுக்கு போனேன். அங்கு உன் ஆருயிர் காதலர் கேசவையும் கண்டேன். உன் கேசவைத்தவிர மற்றவர்க ளெல்லாம் இரண்டு நாட்கள் முன்பே வருகிறார்களாம். உன் கேசவ் மட்டும் கல்யாணத்திற்கு முந்திய தினந்தான அங்கு வருவாராம். கல்யாணத்திற்கு முன அதிகம் லீவு எடுப்பதைவிட, பின்பு லீவு எடுப்பது நல்லது என்று அவர் நினைக்கிறாராம். நான இரண்டு தினங்கள் முனபே வந்து விடுகிறேன். அன்புள்ள கமலா. 3 விமலா வீட்டில் கல்யாண ஏற்பாடு தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. விமலா வீடு இரண்டு நாட்களாக 21
பக்கம்:கேட்கவில்லை.pdf/22
Appearance