உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஏ. வி. பி. ஆசைத்தம்பி "திருடக்கூடாது" என்று சட்டமியற்றிய சமூகமோ அரசியலோ. 'பணக்காரன் - நடுத்தரவாதி - பாட்டாளி' என்ற முப்பிரிவை ஒழித்து, பொருளாதார சமத்துவத்திற் குப்பின் "திருடக்கூடாது" என்ற சட்டத்தை இயற்றி இருக் குமேயானால்..... திருட ஒருவன்கூட முன் வரமாட்டான். சிறைச்சாலை அவசியமில்லாமல் போய்விடும். இந்தக்கருத் தால்தான் சிறையை சீர்திருத்த அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்றார் ரஷ்யஞானி கிராபட்சின். பொதுவாக அடிமை நாடுகளில் குற்றங்கள் அதிக மாகச் செய்யப்படுகின்றன. இதற்குக் காரணம் ஒரு சிலரா கவுள்ள ஆளுபவர்கள். அவர்கள் நன்மைக்கு ஏற்றபடி சட்டங்களை அமைக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆட்சி நடத்தும்போது இருந்த சட்டங்களை. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆ கிய காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பு நியாயபூர்வமாக சரி என்றாலும் சட்டபூர்வமாக குற்றம் என்று ஆங்கிலேயர்களால் கருதப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனையும் தரப்பட்டது. அடைக்கப்பட்டார்கள். சிறையில் "அமைதி சுதந்திரத்தின் குழந்தையே அன்றி அதன் தாயல்ல! எனவே அடிமை நாட்டில் அமைதி இருக்க முடி யாது என்று பண்டித ஜவஹர்லால் முன்பு கூறியிருக் கிறார். C பலர் அடிமைகள்: சிலர் ஆதிக்கக்காரர்கள் என்ற அடிப்படையில் சட்டம் அமைக்கப்படும்போது, குற்றம் 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/45&oldid=1735784" இலிருந்து மீள்விக்கப்பட்டது