சிறைச்சாலை தானாகவே உற்பத்தியாகிவிடும். அதைத் தடுக்க சிறைச் சாலையாலோ இதர தண்டனைகளாலோ இயலவே இயலாது. இதை ஆங்கிலேயர் ஆட்சியும். காங்கிரஸ் கிளர்ச்சி யும் நன்கு நிரூபித்துவிட்டன. ஆங்கிலேயர் காலத்திய சிறைச்சாலை, காங்கிரஸ் தலைவர்களை சட்ட விரோதம் செய் யாதபடி திருத்திவிடவில்லை; மாறாக ஆங்கிலேய சட்டம் உடைக்கப்படும் உணர்ச்சியைத்தான் சிறைச்சாலை கற்பித்தது. சரியான சமூக அரசியல் அடிப்படையில் அமைக்கப் பட்டஎந்தச் சட்டமும் என்றாவது ஒருநாள் உடைத்தெரியப் படுவதைத்தான் சரித்திரம் கூறுகிறது. குற்றங்கள் இன்றைய இந்திய அரசாட்சியில்கூட மலிந்துவிட்டன; சிறையிலே இடமில்லாமல் இருக்கின்றனர். இது எதனை காட்டுகிறது என்றால், இன்று இருக்கிற சட்டம் ஆங்கிலேயர் சட்டம்போல மோச மானதுதான், ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு ஏற்ற சட்டத்தை அமைத்ததுபோல, 'இந்திய சுயராஜ்யம்' என்கிற பெயரிலே, வடநாட்டு ஆதிக்கக்காரர்கள், அவர்கள் நன்மைக்கு ஏற்ற படி சட்டத்தை அமைத்துக் கொண்டார்கள். இந்த ஒருதலைப் பட்சமான சட்டத்தை எதிர்த்து நாடெங் கும் கிளர்ச்சிகள் நடந்து, சிறை நிரம்பிக்கொண் டிருக்கிறது. சமீபத்திலே திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் ஐயாயிரம் பேர்கள்வரை, இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப் 45 க 0
பக்கம்:கேட்கவில்லை.pdf/46
Appearance