உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டது. ஏ.வி.பி . ஆசைத்தம்பி. காலை எழுந்ததும், எங்களுக்கு கஞ்சி கொடுக்கப்பட் எங்களில் பலர் காலை உண்ணாவிரதம் இருந்தோம். சாப்பாடு முடிந்தவுடன் உடனே மீண்டும். எங்களை உள்ளே அடைத்தார்கள். இவ்விதம் சாப்பாடு நேரத்தைத் தவிர சிறையில் அடைக்கப்பட்டே இருந்தோம். இவ்விதம் நான்கு நாட்களை விருதுநகர் சப் ஜெயிலில் கழித்துவிட்டு விடுதலை அடைந்தோம். ஜெயில் என்பது அரசியல்வாதிகளுக்கு மாமியார் வீடு போன்றதல்லவா? மருமகனை அடிக்கடி விருந்துக்கழைப் பதைப்போல, அரசியல்வாதிகளை அரசாங்கம் அடிக்கடி சிறைக்கு அழைக்காமல் இருப்பதில்லை. 1950 ஜூலை 19 காந்தியார் சாந்தியடைய என்ற புத்தகம் எழுதியதற்காக, ஆறுமாத கடுங்காவல் தண்டனை யும், ஐந்நூறு ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேற் கொண்டு மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் ஆக முக்கால் வருடம் தண்டிக்கப்பட்டு, முசிரி சப் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டேன். என்னோடு, என் புத்தகத்தை பிரசுரித்த தோழர் கலிய பெருமாளும், 'அழியட்டுமே திராவிடம்' என்ற புத்தகத்தை வெளியிட்டதற்காக தோழர் தங்கவேலு என்பவரும் துணைக்கு வந்தனர். விருநகர் சப் ஜெயிலைவிட முசிரி சப் ஜெயில் சிறிது பெரிதாக இருந்தது, அதனால் கைதிகளை புளிமூட்டைபோல் அடைக்கவில்லை. எங்கள் மூவரையும் ஒரு அடைத்தார்கள். 56 அரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/57&oldid=1735796" இலிருந்து மீள்விக்கப்பட்டது