உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைச்சாலை இரண்டு தினங்கள் அந்த சிறையில் இருந்தோம். மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை திருச்சி சிறைக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். மாலை ஆறு மணிக்கு திருச்சி சிறைக்குள் நுழைந்தோம். எங்களை 'குவாரன்டைன்' பகுதிக்கு அழைத்துச்சென்று, எங்கள் ஆடைகளை எல்லாம் அகற்றி நிர்வாணமாக்கி, கோ வண ம் ஒன்று கருணையோடு தானம் செய்தார்கள். சிறை தவச்சாலை அல்ல என்று ஒர் அறிஞன் சொல்லி யிருக்கிறான். ஆனால்- கோவணம்' கொடுத்ததைப் பார்த் தால், தவச் சாலைதானோ என்று எண்ண வேண்டியிருந்தது. எங்கள் மூவரையும் பிரித்து, தனித்தனி இருட்டறையில் அடைத்தனர். ஏகாந்தமாக இரவு பூராவும் இருட்டறையில் கயோ தவமிருந்தோம். எங்கள் தவத்தைக் கெடுக்க மேனகை ரம்பையோ வரவே இல்லை. "ஒரு தனி நபரை ஏகாந்தமானதொரு அறையில் நீண்ட நேரம் அடைத்து வைப்பது என்பது மிகவும் கொடு மையானது" என்று சென்னை கவர்னர் ஸ்ரீ பிரகாசா சமீபத் திலே பேசியிருக்கிறார். சென்னை சிறைகளை நான் சமீபத்தில் பார்வையிட் டேன். சிறையில் ஏராளமான தனி அறைகள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்." 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/58&oldid=1735797" இலிருந்து மீள்விக்கப்பட்டது