உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைச்சாலை இந்த மொட்டைக்காட்சிகளோடு. ஆறுதின சிறை வாசத்திற்குப்பின் ஜாமீனில் விடுதலை அடைந்தோம். திருச்சி செசன்ஸ் கோர்ட்டில் எங்கள் அப்பீல் நடந்தது, 1950 ஆகஸ்ட் 18உ ஒரு மாத வெறுங்காவல் தண் டனை எங்கள் மூவருக்கும் விதிக்கப்பட்டு. கை விலங்கு மாட்டப்பட்டு, அன்று திருச்சி சப்ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். விருதுநகர், முசிரி, சப்ஜெயிலைவிட திருச்சி சப்ஜெயில் சிறிது பெரிதாக இருந்தது. மறுநாளே மீண்டும் திருச்சி ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு செப்டம்பர் 12 வரை குவாரண்டைன் பகுதியில் இருந்தோம். செப்டம்பர் 2௨ எங்களை சென்ட்ரல் ஜெயிலின் உள்ளே கொண்டு சென்றார்கள். அங்குதான் உலக்கை இன்றி நெல்குத்தும் கொடுமை நடக்கக் கண்டோம். கைதிகள் மிருகத்தனமாக நடத்தப் படுவதையும் கண்டோம். கைதிகளை மானபங்கப்படுத்த வோ அவமரியாதையாக நடத்தவோ சிறை அதிகாரிகள் தயங்குவதே இல்லை. இந்த கொடுஞ் சிறையில் இருந்து 1950 செப்டம்பர் 11-ல் விடுதலை அடைந்து வெளியே வந்தோம், அதோடு காங்கிரஸ் அரசாங்கம் எங்களை விடவில்லை. 1953 ஜூலை 8-ல் ஆச்சாரியார் கல்விதிட்டத்தை எதிர்த்து ஊர்வலம் சென்றதற்காக. நான் உள்பட 56 பேர்களை சென்னையில் கைதுசெய்தார்கள். அன்று இரவு பெரிமேட் 'லாக்கப் சிறையில்' ஒரே அறையில் 15 பேர்களை அடைத்து வைத்தார்கள். 59 மறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/60&oldid=1735799" இலிருந்து மீள்விக்கப்பட்டது