பக்கம்:கேரக்டர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட்

"சும்மாத்தானே இருக்கீங்க! பல்லாங்குழி ஆடலாம் வரேளா!" என்பாள் ஸப்ஜட்ஜ் சாம்பசிவத்தின் சம்சாரம் ஜானகி அம்மாள்.

"கேசுகளைப் படிச்சு ஜட்ஜ்மெண்ட் எழுதி வைத்துட லாம்னு பார்த்தேன்..."

"பரவாயில்லை, ஞாயிற்றுக்கிழமையிலேகூட என்ன கோர்ட் வேலை வேண்டியிருக்கு? கொஞ்ச நேரம் பல்லாங்குழியோ, பரமபதமோ ஆடலாம், வாங்க" என்பாள் ஜானகி அம்மாள். மனைவியின் உத்தரவுப்படி சாம்பசிவம் பல்லாங்குழி மணையையும் அதற்கு வேண்டிய காய்களையும் எடுத்துக்கொண்டு வந்து உட்காருவார்.

பல்லாங்குழி ஆட்டத்தில் தோல்வி சாம்பசிவத்துக்குத் தான்; காரணம். அவருக்கு ஆடத் தெரியாது என்பதல்ல. வெற்றியைத் தம் மனைவிக்கே விட்டுக்கொடுத்து அவளிடம் நல்ல பெயர் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்பது தான்!

திருமணம் ஆனதும் எல்லோரையும் போல் அவர் மனைவியைத் தம்முடைய வீட்டுக்கு அழைத்து வரவில்லை. அவள் பெரிய இடத்துப் பெண்ணாகையால் அவளைத் தம்முடைய வீட்டுக்கு அழைத்து வருவதற்குப்பதிலாக அவரே அவளுடைய வீட்டுக்குப் போய் 'மனைவிக்குப் புருஷ'னாக வாழ்ந்து வந்தார். ஊராருங்கூட சாம்பசிவத்தைப் பற்றிப் பேசும்போது 'ஜானகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/100&oldid=1481078" இலிருந்து மீள்விக்கப்பட்டது