பக்கம்:கேரக்டர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

கப்பல் ஏறச்சே எனக்கு மூணு வெள்ளி சாஸரும் கப்பும் குடுத்துட்டுப் போனான். இன்னுங்கூட இருக்குது. 'டேய் ரங்ஸாம். சீமைக்கு வந்துடறயான்'னு கூப்டான். இவன்களுக்குத்தான் வேறே வழியில்லே. நாட்டைவுட்டு நாடு வந்தாங்க. நான் போவனா?

"இப்ப தமிழ் பேசறவங்கள்ளாம் கலெக்டராயிட்டப்பறம் ஒண்ணும் சொகம் இல்லே, ஸார்! முன் மாதிரி வரும்படியும் இல்லே. முன்னே துரையைப் பாத்துட்டு வெளியே வரவங்கள்ளாம் அநாவஷ்யமா ஒரு ரூபாயைத் தூக்கி எறிவாங்க, ஸார்! இப்ப எல்லாம் போச்சு, ஸார்! அதான் நயா பைசா கொண்ணாந்துட்டாங்களே. ஒரு நாளைக்கெல்லாம் அம்பது பைசாகூடத் தேறல்லே! நீ உள்ளே போய்வா, ஸார்! இப்பத் தான் கண்டவங்கள்ளாம் நுழையறான்களே...நீ போ ஸார், உன்னைச் சொல்லல்லே..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/99&oldid=1481077" இலிருந்து மீள்விக்கப்பட்டது