பக்கம்:கேரக்டர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



98

"போடா, தொரை உன்னை தொலைச்சுடப் போறன்'னான்;, யாரு? பெருமாள் பையன். நான்தான் ஸார் அவனை பட்லர் வேளையிலே இட்டாந்து வெச்சேன். இங்கிலீஸும் தெரியாது, எளவும் தெரியாது. 'மட்டன்'னா அது இன்னா டாம்பான். நான் கத்துக்குடுத்தேன் ஸார் அவனுக்கு.

"கேளு. ஸார்! ஒருநா தொரை லேட்டா ஆபீசுக்கு வந்தான்.வரலாமா, ஸார்! யார் கேக்கறது? அவன் கலெக்டரு!

"நான் என்னா செஞ்சேன்? அவன் மேஜையிலேருந்து ஒரு சிகரெட்டை எடுத்து, ஊதிக்கினு இருந்தேன். ரொம்ப நாளா சிகரெட் ஊதணும்னு ஆசை ஸார் எனக்கு. இத்தைப் பாத்துக்கினே வந்துட்டான் துரை. அவ்வளவேதான்; டேய்! உன்னை ஒன் மன்த் ஸஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். போடான்னான்'— சரின்னு வூட்டுக்குப் போயிட்டேன். பத்து நாள்கூட ஆவல்லே. ஒரு நா வூட்டு முன்னாலே கயத்து கட்டில்லே குந்திக்கினு இருக்கேன். தொரை கார்லே வந்து நிக்கறான். பைலு ஏதோ ஆப்படல்லே. தேடித் தேடிப் பாத்திருக்கான். இந்த ரங்கசாமி இல்லாமே எந்த தொரை குப்பை கொட்டமுடியும்? ஒழிஞ்சு போறான்னு, போய் எடுத்துக் குடுத்தேன். 'நோ ஸஸ்பெண்ட்! நாளையிலேருந்து வேலைக்கு வரலாம்'னான், ஸார். அப்புறம்தான் போனேன். இது இன்னா உத்தியோகம், ஸார். இது இல்லாட்டி எத்தினியோ இங்கிலீஷ் கம்பெனிலே வேலை 'ரெடி'யா இருக்குது ஸார், எனக்கு. ஸாண்டர்ஸ் துரைகிட்டே எத்தினி பசங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பேன் தெரியுமா?

"அதோ தெரியுது பார் கட்டடம். இன்னா தெரியுமா அது? புளிய மரம்! ஆமாம், ஸார்! நாள் வேலைக்கு வரப்போ அங்கே ஒரு புளியமரந்தான் இருந்துது. அதுக்கு அஸ்திவாரம் வெட்டறப்போ நான் வேலைக்கு வந்து சேர்றேன். வுடு ஸார் அதெல்லாம்...நான் பார்க்காத வேலையா?...

"இப்ப இன்னாஸார் டவாலி வேலை! அப்ப பார்க்கணும். எடுத்ததுக்கெல்லாம் துட்டுதான், ஸார்! நார்ட்டன் துரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/98&oldid=1481076" இலிருந்து மீள்விக்கப்பட்டது