பக்கம்:கேரக்டர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



109

ஸீக்ரெட்! நாசர் வந்துட்டுப் போறதுக்கும் இவன் வரதுக்கும் சம்பந்தம் இருக்கய்யா. பஞ்சசீலம் பஞ்சசீலம்னு இருக்கிறதையெல்லாம் கோட்டைவிடப் போறோம்!"

"என்ன அண்ணாசாமி ஸார், ஏன், இப்படி எதுக்கெடுத்தாலும் சுவர்ன்மெண்டை அட்டாக் பண்றேள்? சர்க்கார் என்னய்யா பண்ணும்?"

"என்ன பண்ணுமா! தட்டிக் கேக்கறதுக்கு ஓர் ஆள் இருந்தா இப்படி நடக்குமா? சோஷலிஸ்டிக் பாட்டனாம் பேரனாம்? என்னய்யா சோஷலிஸம் வேண்டியிருக்கு? சோத்துக்கு லாட்டரி அடிக்கிறோம். சோஷலிசம் பண்றாளாம்" என்பார் அண்ணாசாமி.

"அதான் பெரியவர் ஆரம்பிச்சிருக்காரய்யா புது பார்ட்டி!"

ஆமாம்; புது பார்ட்டி ஆரம்பிச்சு ஓயாமல் கவர்ன் மெண்டை கிரிடிஸைஸ் பண்ணிட்டா ஆயிடுத்தா? அப்கோர்ஸ், பெரியவர் இண்டலிஜெண்ட்தான். ஸ்ட்ராங்கா தான் பேசறார். யார் இல்லேங்கறா? நேருவும் ரெஸ்பெக்ட் வெச்சுதான் மீட் பண்ணியிருக்கார். பாலிஸி கிளியரா இல்லியே!"

"ஸார், இந்த ஸௌத் ஆப்பிரிக்கன் ப்ரீமியர்?"

"அட, சரித்தான், ஸௌத் ஆப்பிரிக்காவுமாச்சு, புடலங்காயுமாச்சு. அடேடே! மார்க்கெட்டுலே பிஞ்சு புடலங்கா சீப்பா வந்திருக்காம். விலை ஏற்றதுக்கு முன்னே அதை வாங்கிண்டு போய்ச் சேருவோம், வாரும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/109&oldid=1481087" இலிருந்து மீள்விக்கப்பட்டது