பக்கம்:கேரக்டர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

"யாரு? பிராக்சர் கேஸா? இன்னா ஓனும் ஒனக்கு?"

"தண்ணி வேணும்மா..."

"தன்னி இல்லே...சும்மா சும்மா தன்னிக் குடிக்காதே. 'ஸெப்டிக்' ஆயிடும்.

"அம்மா..."

"யாரது...ஸ்!"

"நான்தாம்மா எட்டாம் நெம்பர்..."

"யாரு? ஸ்ட்மக் ஆபரேஷ்னா? ஒனுக்கு இன்னா ஓனும்?..."

"வீட்லேருந்து பலாப்பழம் வந்திருக்குதும்மா, சாப்பிடலாமாம்மா..?"

"நல்ல ஆலு நீ! பலாப்பலம் தின்றே? ஜாக் ஃபுருட்! டாக்டர் வரட்டும் சொல்றேன். வயத்து வலிக்கு ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டு, பலாப்பலம் சாப்றயா? உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடறேன் பாரு; பாய். எங்கே அந்த பலாப்பலம்? எடு இப்படி ! இந்தா, இதைக் கொண்டுபோய் என் டேபில் மேலே வை. நீ துண்ணுப்புடாதே! வார்டு பூரா குப்பை! வாட்டர் புடிச்சு வெக்கலே...பேஸின் கொண்டாந்து வெக்கலே. போய் க்விக்கா கொண்டா மேன். ட்வெண்டித்ரீ பெட்டுக்கு பெட் பேன் வேணுமாம்; அடுச்சுக்குது பார். போ, போ..."

"இன்னா நல்லசாமி! சொகமாயிட்டாயா? இப்ப எப்படி இருக்குது மார்வலி?"

"பரவாயில்லம்மா."

"இந்தா, மருந்து குடிச்சுடு. ராத்திரி பில்ஸ் சாப்டயா? நல்லா தூங்னியா?"

"சாப்பிட்டேம்மா; தூங்கினேம்மா."

"நல்லாயிடும். அடுத்த மாசம் வேலைக்குப் போகலாம். இவங்கல்லாம் யாரு? மணி ஆறு ஆவப் போவுது. நீங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/112&oldid=1481091" இலிருந்து மீள்விக்கப்பட்டது