பக்கம்:கேரக்டர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



116

"மூணு நாளா பாதை பொறுக்கலீங்க. முதுகுப் பக்கம் ஒரே வலியாயிருக்குது. மல்லாந்து படுத்தா மாரை வலிக்குது."

"அப்படியா? இனி மல்லாந்து படுக்காதே, போ! இந்தா, இந்த மாத்திரையை ஒரு வாரம் சாப்பிடு. சரியாயிடும்! ஊம்... பெரியவரே, உமக்கு என்ன?..."

"உடம்புக்குச் சொகம் இல்லீங்க"

"அது தெரியுது.இல்லேன்னா எதுக்கு என்னைத் தேடிக்கிட்டு வரப்போறீங்க? வைத்தியரைத் தேடிக்கிட்டு வந்தாலே உடம்புக்குச் சொகம் இல்லேன்னுதான் அர்த்தம். வியாதி என்னங்கறதைச் சொல்லும்!"

"பசி இல்லே."

"இருக்காது."

"காது கேட்கல்லே."

"கேட்காது!"

"கண் தெரியல்லே."

"தெரியாது."

“இதுக்கு என்ன செய்யலாங்க?"

"உமக்கு என்ன வயசு ஆகுது?"

"எழுபத்தொன்பது."

"பேசாமல் வீட்டிலேயே இரும். வயசாயிட்டப்புறம் இதுக்கெல்லாம் மருந்து கிடையாது. அப்புறம்? இந்தக் குடையை இங்கே யார் வைத்தது? நீயா? இந்த ஈரக் குடையைக் கொண்டுவந்து நாலுபேர் உட்காருகிற பெஞ்ச் மேலே வெச்சிருக்கயே? உனக்கு புத்தி இருக்கா?" வைத்தியர் அந்த ஈரக் குடையை எடுத்துக் கோபமாக வெளியே வீசி எறிவார்.

"வைத்தியரய்யா, என்னைக் கொஞ்சம் சீக்கிரம் கவனியுங்க. தெருவிலே டாக்ஸி வெயிட் பண்ணுது."

"ஏன்யா, உனக்கு எந்த ஊரு?"

"திருநெல்வேலிங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/116&oldid=1481153" இலிருந்து மீள்விக்கப்பட்டது