பக்கம்:கேரக்டர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'வைத்தியர்' வேதாசலம்

எமனே பயந்து நடுங்கக் கூடிய குரல். பேச்சில் நயமோ தயவோ தாட்சண்யமோ இருக்காது. யாரையும் தூக்கி எறிந் தாற் போலத்தான் பேசுவார். நோயாளிகள் தங்கள் வியாதி யைப் பற்றி விவரிக்கும்போது வைத்தியர் வேதாசலம் இஷ்டமிருந்தால் 'ஊம்' போடுவார். காட்டு மிருகங்கள் உறுமுவதைப்போல் அவர் 'ஊம்' போடுவதைக் கேட்கும்போதே நோயாளிகளுக்குச் சப்த நாடிகளும் அடங்கிப் போகும், கடைசியில் அவர் புட்டியில் மருந்தையும், டப்பாவில் லேகியத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கண்டிப்பான குரலில், "மூன்று நாளைக்கு இதைச் சாப்பிடணும். அடுத்த வெள்ளிக்கிழமை மறுபடியும் என்னை வந்து பார்க்கணும். இப்போது மருந்துக்கு இரண்டு ரூபாய் கொடுக்கணும்" என்பார்.

"அடுத்த வெள்ளிக்கிழமை கலியாணங்க. அதனாலே..."

"வியாதியெல்லாம் தீர்ந்த பிறகு கலியாணம் செய்துக்கலாம்...... இப்ப ஒண்ணும் அவசரம் இல்லே..."

"கல்யாணம் எனக்கு இல்லிங்க. என் சகலபாடி மகனுக்கு."

"அது சகலபாடியோ, வியாசர்பாடியோ? வெள்ளிக்கிழமை இங்கே வந்தாகணும்."

"ஊம்; அடுத்த கேஸ் யாரய்யா? நீயா? உனக்கு என்ன?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/115&oldid=1481152" இலிருந்து மீள்விக்கப்பட்டது