பக்கம்:கேரக்டர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

"தெரியுமாவது? நான்தானே இவனை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தேன்! செம்பன்னார் கோயில் பையனாச்சே இவன்? இவன் சின்னவனா இருந்தப்போ, 'சீவாளியைத் தொட மாட்டேன்; சீமைப் படிப்புத்தான் படிக்கப் போறேன்னு' பிடிவாதம் பிடிச்சான். இவனுடைய அப்பன் எங்கிட்டே வந்து அழுதான். இவனை என்ன பண்ணினேன் தெரியுமா அப்போ? காதைப் பிடிச்சுத் திருகி, "போய் ஒத்து ஊதுடா பயலே' என்று விரட்டி அனுப்பிச்சேன். இப்ப என்னடான்னா பிரமாதப்படுத்தறான். அகாடமியிலேகூட சான்ஸ் கொடுக்கச் சொல்லியிருக்கேன்" என்பார்.

இதற்குள் இன்னொருவர் வந்து, "இந்த வைரமோதிரம் எங்கே வாங்கினீங்க, சார்?" என்பார்.

"வாங்கறதாவது? பம்பாயிலே ஒரு டைமண்ட் மர்ச்செண்ட் கொடுத்தனுப்பிச்சான். அவனுக்கு நாய் வளக்கறதிலே ஒரு மேனியா. எங்கிட்டே நாலு ஸ்பேனியல் இருந்தது. அதை யாரோ போய் அவன் காதுலே போட்டு வெச்சுட்டான் போல இருக்கு. விடுவானா அவன்? 'மை டியர் நாகசாமி' அந்த நாலு ஸ்பேனியலையும் எனக்கு அனுப்பிச்சுடு'ன்னு லெட்டர் எழுதிவிட்டான். அப்புறம் என்ன செய்யறது? அனுப்பி வெச்சேன். அவ்வளவுதான். அவன் வெரிமச் பிளீஸ்டு! உடனே ஒரு வைர மோதிரத்தை அனுப்பிச்சு கோஹினூர் டைமண்ட், ரொம்ப ரேர் ஜெம். இதை என் ஞாபகமாக உன் விரலிலே போட்டுக்கணும்னு கட்டாயப் படுத்தினான். எப்படி மறுக்கிறது?"

இதற்குள் "நேற்று உங்களை ஏரோடிரோம்லே பார்த்தாப்பலே இருக்கே?" என்று ஒருவர் ஆரம்பிப்பார்.

"என்ன சார் பண்றது? சீப் என்ஜினீர் சீதாராமய்யர் திடீர்னு பங்களூர் போகணும், ஏர் டிக்கட் ஒண்ணு புக் பண்ணிக் குடுக்க முடியுமான்னு எனக்கு போன் பண்ணினார். பங்களூரில் அவர் தாயாருக்கு ஏதோ ரொம்ப சீரியஸ்னு தந்தி வந்ததாம். யாருக்கு எது வேண்டுமானாலும்தான் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/136&oldid=1481405" இலிருந்து மீள்விக்கப்பட்டது