பக்கம்:கேரக்டர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'நான்தான்' நாகசாமி

கையிலே ரிஸ்ட் வாட்ச், விரலிவே வைர மோதிரம், குரலிலே ஒரு கம்பீரம் இந்த லட்சணங்களைக் கொண்டவர் தான் நாகசாமி. அவருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் கிடையாது. அவரால் சாதிக்க முடியாத காரியங்களும் கிடையாது. யாருக்கும், எந்த நேரத்திலும், எம்மாதிரி உதவி தேவையானாலும் நாகசாமியைத்தான் தேடுவார்கள். அவரும் செய்வார். ஆனால், "நான்தான் செய்தேன்" என்று கொஞ்சம் தற்புகழ்ச்சி செய்துகொள்வார்; அவ்வளவுதான்.

நகரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் எவ்லாவற்றிலும் நாகசாமியைச் சந்திக்கலாம்.

கலியாண ஊர்வலங்களில் அவர் 'அமுத்த'லாக நடந்து செல்லும்போது நாதசுரக்காரர் அவரைக் கண்டுவிட்டால், தம்முடைய வாசிப்பை அப்படியே நிறுத்திவிட்டு, அவருக்குக் கை கூப்பி வணக்கம் செய்வார். அச் சமயம் பார்க்கவேண்டுமே, நாகசாமியின் முகத்தில் பொங்கும் பெருமையை!

நாதசுர வித்வான் தமக்குக் கும்பிடுபோடுவதை நாலு பேர் கவனிக்கிறார்களா என்று ஒரு கண்ணால் அக்கம் பக்கத்திலுள்ளவர்களைக் கவனித்துக் கொள்வார்.

"என்ன ஸார், உங்களுக்குத் தெரியுமா இந்த நாதஸ்வரக்காரரை?" என்று யாராவது கேட்க வேண்டியதுதான்; உடனே தொடங்கிவிடுவார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/135&oldid=1481402" இலிருந்து மீள்விக்கப்பட்டது