பக்கம்:கேரக்டர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பான். புதிய பிஸினஸுக்குப் பல யோசனைகளும் டாகுமெண்டுகளும் ரெடியாக வைத்திருப்பதாகப் பையைத் தூக்கிக் காட்டுவான்.

அப்படி என்ன பிஸினஸ் என்று யாராவது கேட்டால், 'ஆவாரம் தழையிலிருந்து காப்பியைப் போல் ஒரு பானம் தயாரிக்கப் போகிறேன். ஆவாரம் இலையிலிருந்து (Leaf) தயாரிப்பதால் காபிக்குப் போட்டியாக லீம்பி என்று அதற்குப் பெயர் வைக்கப்போகிறேன்' என்பான்.

"ஒரே தீக்குச்சியில் திருப்பித் திருப்பி நெருப்புண்டாகும் எடர்ன் மாட்ச் ஸ்டிக், ரப்பர் பிளேடு, தேயாத டயர், உருகாத ஐஸ்—இப்படி எத்தனை எத்தனையோ நவீன அதிசயப் பொருள்களெல்லாம் உற்பத்தி செய்யப் போகிறேன். அமெரிக்காவிடம் டாலர் உதவிகேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறேன். சரக்குகளைத் தயாரித்து உடனே மாதிரிக்கு அனுப்பும்படி இன்றுதான் பதில் கடிதம் வந்திருக்கிறது அமெரிக்கன் எம்பஸியில் என்னை 'இண்டர்வியூ' கேட்டிருக்கிறார்கள். எனக்கோ டயம் இல்லை."

"ஏன் ரொம்ப பிஸியோ?"

"ஆமாம்; என் மச்சினியின் முதல் குழந்தைக்கு ஆண்டு நிறைவு. அதற்கு நான் அவசியம் இங்கே இருக்கவேண்டும்.

"யார் கூப்பிடறது? போன் காலா! பைனான்ஸ் மினிஸ் டரா? எனக்கா? இதோ வந்துட்டேன். உங்களை அப்புறம் மீட் பண்றேன், ஸார்!"

குட் மார்னிங்!.......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/14&oldid=1478401" இலிருந்து மீள்விக்கப்பட்டது