பக்கம்:கேரக்டர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அக்கப்போர் சொக்கப்பன்

"சார்,சார்" என்று கையைத் தட்டிக் குடியே முழுகி விட்டதைப் போல் அவசரமாக யாரையோ கூப்பிடுகிறானே, அவன்தான் அக்கப்போர் சொக்கப்பன்.

காலம், இடம், மனிதர்களின் தராதரம் எதுவும் அவனுக்கு அக்கறை கிடையாது. யாராயிருந்தாலும், எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும், எந்த இடமாயிருந்தாலும் அவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் பயங்கரமாக நாலு சங்கதிகளையாவது சொல்லாவிட்டால் அவனுக்கு மண்டை வெடித்து விடும்.

"சார்! உங்களுக்குத் தெரியாதா சமாசாரம்? இப்படி எங்கே போகிறீர்கள்?" என்று கேட்பான்.

"ராயப்பேட்டைக்கு!" என்பார் அவர்.

"பாவம், உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது போலிருக்கு. அந்தப் பக்கம் போகாதீங்க, சார்; கல்லடிபட்டுச் செத்துப்போவீங்க?" என்பான்.

"கல்லடியா? ஏன்? எதுக்கு? என்னை எதுக்கு அடிக்கிறாங்க?" என்று அலறுவார் அந்த ஆசாமி. "அரசியல் கட்சி இரண்டு அந்தப் பக்கம் ஊர்வலமாப் போறப்போ இரண்டுக்கும் மோதல் ஏற்பட்டுப் பெரிய ரகளை! ஒரே கல் வீச்சு! ரோடு போடறதுக்காக அங்கே கொட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/45&oldid=1479352" இலிருந்து மீள்விக்கப்பட்டது