பக்கம்:கேரக்டர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சி ஆர். வி. ராமன்

"அது ஒரு கிராக்கு சார்: ஆராய்ச்சி பண்றதாம் ஆராய்ச்சி! எப்பக் கண்டாலும் வீட்டு நிறைய தழை, புல்லு, பூச்சி இதையெல்லாம் குவிச்சு வெச்சுண்டு பூதக்கண்ணாடியிலே பார்த்துண்டிருக்குது. வேளையிலே சாப்பிடறதில்லே. ராத்திரி யெல்லாம் தூங்கறதில்லே. ஏதோ பெரிசா புரட்டிடற மாதிரி ஆகாசத்தை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறது? இதான் அதுக்கு வேலை. எம்.ஏ.படிச்சிருக்கு; என்ன பிரயோஜனம்? ஒழுங்கா ஓர் உத்தியோகத்துலே சேர்த்து குடியும் குடித்தனமுமா வாழக்கூடாது? மனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டு வைத்துட்டு காடு மலையெல்லாம் அலைஞ்சுண்டிருக்குது. கேட்டால் "ரிஸர்ச்' பண்றதாம். ஏதோ பெரிசா கண்டு பிடிச்சுடப் போறதாம். மனசிலே ஐன்ஸ்டீன், சி.வி. ராமன்னு நினைப்பு! அதுக்காக ஆர். வெங்கட்ராமன்கிற தன் பெயரை ஆர்.வி.ராமன்னு சுருக்கி வைத்துக்கொண்டிருக்கிறது.

"ஒரு நாளைக்கு என்ன செஞ்சுது தெரியுமோ? காட்டிலே இருக்கற 'மருதாணி'த் தழையையெல்லாம் வெட்டிண்டு வந்து ஆட்டுக்கல்லுலே போட்டு அரைச்சிண்டிருந்தது.

"இதெல்லாம் என்னடான்னு கேட்டேன். அந்தக் கிராக் சொல்றது : மருதாணியை மாவா அரைச்சு உலர்த்திப் பவுடர் பண்ணி அதை க்யூடெக்ஸுக்குப் பதிலா உபயோகப் படுத்தறதுக்கு ஆராய்ச்சி நடத்திண்டிருக்கானாம். அதை வெளிநாட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/50&oldid=1479357" இலிருந்து மீள்விக்கப்பட்டது