பக்கம்:கேரக்டர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கெல்லாம் அனிப்பிச்சா லட்சம் லட்சமாப் பணம் வருமாம். டாலர் எர்னிங் பிஸினஸாம்! எப்படியிருக்கு பார்த்தயோன்னோ இதும் புத்தி? இது உருப்படுமான்னு கேக்கறேன்.

"இதுக்கு முன்னே ஒருதடவை இப்படித்தான் இன்னோர் ஆராய்ச்சி நடந்திண்டிருந்தது. என்னடா இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனமா யிருக்கேன்னேன். 'உனக்கு ஒண்ணும் தெரியாது,மாமா! இது மட்டும் ஸக்ஸஸ் ஆகாட்டா என் தாடியை எடுத்துடறேன் பாரு'ன்னு சபதம் பண்றது!

"இது தாடியை எடுத்தால் தேவலையா? எடுக்காட்டாத் தேவவையா? ஒரு நாளைக்குத் தாடி வெச்சுண்டு வரும். இன்னொரு நாளைக்குத் தாடியை எடுத்துட்டு வரும். இதுதான் சுத்த பையித்தியமாச்சே!

"முன்னே ஒருதடவை ஊரிலே இருக்கிற பழைய 'பியூஸ்' போன பல்பெல்லாம் தெருத் தெருவா அலைஞ்சு விலைக்கு வாங்கிக்கொண்டு வர ஏற்பாடு பண்ணித்து.

"ஏதாவது பழைய 'பல்ப்' வியாபாரம்தான் பண்ணப் போறதோன்னு நினைச்சேன். இது என்ன பண்ணித்து தெரியுமோ? லட்சம் பல்பு சேர்ந்தப்புறம்தான் ரகசியத்தை வெளியே விடுவேன்னுது.

"கடைசியா ஓர் அமாவாசை அன்னிக்கு இருபது முப்பது பேரை அழைச்சுண்டு எங்கேயோ நடுக்காட்டிலே போய் அங்கே பறக்கிற மன்மினிப் பூச்சியெல்லாம் புடிச்சிண்டு வந்து காலி பல்புகளில் அடச்சு மூடிட்டுது. 'மாமா? மின்சாரமில்லாமலேயே எரியக்கூடிய மின் விளக்குகளைக் கண்டுபுடிச்சுட்டேன் இத பாரு'ன்னா மின்மினிப் பூச்சியை அடைச்ச வெச்ச பல்பைக் கொண்டுவந்து காண்பிக்கிறது.

"ஏண்டா, பூச்சி செத்துப்போயிட்டா என்னடா பண்ணு வேன்னேன்? இந்தியாவிலே மின்மினிப் பூச்சிக்குப் பஞ்சமே கிடையாது. எவ்வளவு வேணுமானாலும் கிடைக்கும். அப்படியே கிடைக்காவிட்டாலும் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி பண்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/52&oldid=1479359" இலிருந்து மீள்விக்கப்பட்டது