பக்கம்:கேரக்டர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

மாதிரி மின்மினிப்பூச்சிப் பண்ணை ஒன்று நடத்தி உற்பத்தி செய்துக்கலாங்கறது. "ஏண்டா உனக்கு தலையெழுத்து! ஒழுங்கா ஒரு வேலைக்கு போயேண்டா'ன்னா, 'உனக்குத் தெரியாது, மாமா! இது மட்டும் ஸக்ஸஸ் ஆச்சுன்னா லட்சம் லட்சமாப் பணம் புரளுங்'சுறது.

"ஒரு மாசம் கழிச்சு புதுசா இப்ப என்னடா ஆரம்பிச்சிருக்கேன்னு கேட்டேன்.

"மாமா! என்கூட ஒரு ஆறு மாசம் மலபார்வே வந்து இருக்கயா?'ன்னான்.

"மலபார்லே என்னடா ஆராய்ச்சின்னேன்? அங்கே வாழைத்தோப்பெல்லாம் காண்ட்ராக்ட் எடுக்கப்போறானாம். வாழைப்பழங்களையெல்லாம் உரித்து வெயிலில் உலர்த்தி பவுடராப் பண்ணி டப்பாவில் அடைத்து அமெரிக்காவுக்கு அனுப்புவானாம். அந்தப் பவுடர்லே அவங்க தண்ணியைத் தெளிச்சா பழப்பவுடர் மறுபடியும் வாழைப்பழமாக மாறிவிடுமாம். இப்படி ஒரு திட்டம் வெச்சிருக்கேன்னு பயமுறுத்தறான்.

"இதைப்போல இன்னும் என்னென்னவோ ஐடியாவெல்லாம் இருக்காம் அவனிடம். ஒரு நாளைக்கு எருக்கஞ்செடி பக்கத்திலே போய் உட்கார்ந்துண்டிருந்தது. ஏன் தெரியுமோ? அந்தச் செடியிலேருந்து பஞ்சு வெடிச்சு வருமாம். அந்தப் பஞ்சுலேருந்து ரேயான் நூல் மாதிரி தயார் செய்து, அதுக்கு 'எருக்ரேயான்'னு பேர் வைக்கப்போறானாம். இதன் ஐடியாவிலே எருக்கை வெட்டி அடிக்க!

"அப்பளத்து மாவில் கோந்தும், பாகும், மிளகுப்பொடியும் கலந்து இண்டியன் சுயிங்கம் தயார் பண்றதுக்கு ஒரு திட்டமாம். குடமிளகாய்ச் செடிக்கு தேன் இஞ்செக்ஷன் பண்ணி ஸ்வீட் குடமுளகாய் செய்றதுக்கு ஒரு திட்டமாம்.

"வீணாகப் போகும் ரம்பத்தூளை வஜ்ரத்தில் கலந்து மர அட்டைகள் செய்வதற்கு மற்றொரு திட்டமாம்! இப்படி ஆயிரம் திட்டம் வைத்திருக்குதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/53&oldid=1479360" இலிருந்து மீள்விக்கப்பட்டது