பக்கம்:கேரக்டர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'துக்ளக்' துரைசாமி

அந்தப் பங்களாவுக்குள் ஒரு சமயம் தென்றல் வீசும். ஒரு சமயம் புயல் அடிக்கும். ஒரு நாள் பங்களாவைச் சுற்றிலுமுள்ள தோட்டத்துச் செடிகளெல்லாம் 'குளுகுளுவென்று பசுமையாகப் பூத்துக் குலுங்கும். இன்னொரு நாள் தோட்டம் முழுதுமே ஒரு செடிகூட இல்லாமல் வெட்டப்பட்டுப் படு சூன்யமாகக் காட்சி அளிக்கும்.

மேற்படி பங்களாவுக்குச் சொந்தக்காரரான 'துக்ளக்—துரைசாமி'யின் மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறதோ அப்படியெல்லாம் பங்களாவின் சூழ்நிலையும் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்.

சிலசமயம் அவர் ஆனந்தத்தில் திளைத்திருப்பார். சில சமயம் கோபாவேசம் கொண்டு சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டிருப்பார்.

"யார்மீது கோபம்? எதற்காகக் கோபம்?" என்று ஒரு ஒருவராலும் ஊகிக்க முடியாது. 'எஜமானுக்குக் கோபம்', அவ்வளவுதான் தெரியும் வேலையாட்களுக்கு.

துரைசாமி டெலிபோனை எடுப்பார். "ஹல்லோ கல்கத்தா!" என்று கல்கத்தாவைக் கூப்பிடுவார். கல்கத்தா கிடைத்ததும் ஆங்கிலத்தில் அதைச் சக்கைப்போடாகப் போட்டுக் கதிகலங்க அடிப்பார். அவருக்குக் கோபம் வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/55&oldid=1479362" இலிருந்து மீள்விக்கப்பட்டது