பக்கம்:கேரக்டர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

ஒரு சீசனில் தோட்டத்தைப் பார்த்தால் இங்கிலீஷ் குரோட்டன்ஸாயிருக்கும். இன்னொரு சீஸனில் அதெல்லாம் போய்ப் புடலும் வாழையும், அவரையும், கீரையுமாய்க் காணப்படும்.

வேறொரு சீசனில் மறுபடியும் குரோட்டன்ஸாக மாறி அவற்றுக்கு மத்தியில் ஒரு துளசி மாடமும் காட்சி அளிக்கும்.

ஆங்கிலோ இந்தியப் பெண்மணி புடவை கட்டிக் கொண்டதுபோல் இரண்டும் கலந்த விசித்திரக் காட்சி!

உணவு வகையிலும் இத்தகைய கலப்புகள் உண்டு. ரொட்டிக்குச் சாம்பார்! தோசைக்கு ஜாம்! இட்லிக்கு பெப்பர் அண்டு சால்ட் பவுடர்!

ஒருநாள் பால்காரன் லேட்டாக வந்தான் என்பதற்காக அவன் மீது கோபித்துக்கொண்டு சொந்தத்தில் இரண்டு பசு மாடுகளே வாங்கிவிட்டார்.

முளைக்கீரை வளர்த்துப் பசுமாட்டை மேயவிட்டால், பாலில் 'காவ்ஷியம் சத்து' அதிகமாகச் சேரும் என்று அவருக்குத் தெரிந்த வைத்தியர் ஒருவர் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்; அன்றே தோட்டத்திலிருந்த செடி கொடிகளையெல்லாம் துளசி மாடம் உள்பட வெட்டி எடுத்துவிட்டு தோட்டம் முழுதும் முளைக்கீரையாக விதைத்துவிட்டார். அந்த வைத்தியரையும் வீட்டோடு அழைத்து வந்து வைத்துக் கொண்டு முளைக்கீரை மேய்ந்த பசுவின் பாலினால் தயாரிக்கப் பட்ட காப்பியை வைத்தியருக்கும் கொடுத்துத் தாமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

ஒருநாள் சமையல்காரன் தோட்டத்தில் வளர்ந்திருந்த முளைக்கீரையைப் பிடுங்கி வந்து சமையல் செய்து விட்டான். அவ்வளவுதான்; துரைசாமிக்கு வந்து விட்டது கோபம்!

"மாட்டுக்கு வளர்த்த கீரையை என் உத்தரவு இல்லாமல் எப்படி சமையலுக்கு எடுத்து வரலாம்?" என்று ஆவேசம் வந்தவர்போல் பெருங் கூச்சலிட்டார், சமையல்காரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/58&oldid=1479365" இலிருந்து மீள்விக்கப்பட்டது