பக்கம்:கேரக்டர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

'டிஸ்மிஸ்' செய்யப்பட்டான். மூன்று நாள் ஒட்டலிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டது. கடைசியில் துரைசாமிக்குக் கோபம் தணிந்ததும், "சமையல்காரனை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வரவேண்டும்?" என்று ஓர் உத்தரவு போட்டார்.

"அவன் பம்பாய்க்கு போய்விட்டானாம்” என்றார்கள்.

"பரவாயில்லை; உடனே யாராவது ப்ளேனில் புறப் பட்டுப்போய் அவனைக் கையோடு அழைத்துக்கொண்டு வரவேண்டும்" என்றார் துரைசாமி.

பாம்பாயில் தேடிப் பார்த்ததில் சமையல்காரன் அங்கு இல்லையென்று தெரிந்தது.

இவர் சமாசாரம் சமையல்காரனுக்குத் தெரியாதா என்ன? கோபம் தீர்ந்ததும் துரைசாமி எப்படியும் தன்னை அழைத்துப் போக ஆள் அனுப்புவார் என்று, அவன் சென்னை ஓட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்தான். கடைசியில், துரைசாமியின் ஆட்கள் சமையல்காரன் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்து அவனைக் கையோடு அழைத்து வந்தார்கள்.

"அந்த வைத்தியர் வீட்டை வீட்டுத் தொலைந்தால்தான் நான் வருவேன்" என்று ஒரு நிபந்தனை போட்டான் சமையல்காரன்.

"வைத்தியர் என்ன? மாடு, கீரை, பயிர் எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறேன். நீ வா" என்றார் துரைசாமி.

வைத்தியர் போனதும் சமையல்காரன் திரும்பி வந்தான். தோட்டத்திலிருந்த கீரைப் பாத்திகளையெல்லாம் மாற்றி மறுபடியும் குரோட்டன்ஸ் போட்டாயிற்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/59&oldid=1479366" இலிருந்து மீள்விக்கப்பட்டது