பக்கம்:கேரக்டர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'வீட்டுக்கார' வெங்கடாசலம்

"என்னங்க, ஆறுமுகம் பிள்ளையா? வாங்க வாங்க, எங்கே இப்படி இவ்வளவோ தூரம்? ஓகோ! புரசவாக்கம் வீட்டு விஷயமா வத்தீங்களா? உங்களுக்குத் தெரிஞ்சவருக்கு யாருக்கோ வேணும்னு சொன்னீங்களே. நல்லது; அவரே எடுத்துக்கட்டும். கண்டிஷன்லாம் தெரியுமில்லே? மூணு மாசம் அட்வான்ஸ், வாடகை எழுபத்தஞ்சு ரூபா. இரண்டாந்தேதிக்குள்ளே வாடகை கரெக்டா வந்துடணும் ரசீது கொடுக்க மாட்டேன். எலெக்ட்ரிக்பில் தனி. செவத்துலே ஆணி அடிக்கக் கூடாது. கதவைப் 'படால் படால்'னு சாத்தக் கூடாது. தோட்டத்துலே செடி செட்டு போடக்கூடாது.

"என்னடா வெங்கடாசலம் இவ்வளவு கண்டிப்பா பேசறானே'ன்னு நினைக்கலாம். இந்த வீட்டுச் சமாசாரத்திலே அவ்வளவு கஷ்டப்பட்டுப் போயிருக்கேங்க நானு. அப்புறம் மனஸ்தாபம் ஒதவாது பாருங்க.

"வெங்கடாசலமா! ஐபோ! அவன் பெரிய பேராசைக்காரன், சுத்தக் கருமி, அப்படி இப்படிம்பாங்க. சொல்றவங்களுக்கென்னாங்க? நாள் அநாவசியமாகக் காலணா செலவழிக்கவும் மாட்டேன். இன்னொருத்தர் சொத்துக்கு ஆசைப்படவும் மாட்டேன். எனக்கு எதுக்குங்க? என் சம்பாதனை எனக்கிருக்குது. செளகார்பேட்டையிலே மூணு வீடு, திருவல்லிக்கேணியிலே இரண்டு வீடு. புரசைவாக்கத்திலே ஒரு வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/60&oldid=1479442" இலிருந்து மீள்விக்கப்பட்டது