பக்கம்:கேரக்டர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



64

"காலையிலே கிணத்து ஜலத்திலே நாலு வாளியைத் தூக்கித் தலைமேலே ஊத்திக்கிட்டு உட்கார்ந்துட்டாப் போதும் காத்துபாட்டுக்கு ஜிலுஜிலுன்னு வீசிக்கிட்டிருக்கும்.

"என்னங்க, அந்த வக்கீல் மாதிரி ஆசாமிங்களா ரெகமன்ட் பண்ணிடாதீங்க.அப்புறம் அவஸ்தை! சுண்டிஷன்லாம் ஞாபகம் இருக்குதுங்களா? அட்வான்ஸ் மூணு மாசம். வாடகை எழுபத்தஞ்சு ரூபா. ரசீது கிடையாது. எலெக்ட்ரிக் பில் தனி. கார்ப்பரேஷன்காரன் வந்தால் வாடகை நாற்பதுன்னு சொல்லணும். கதவைப் படால்னு அடிச்சுச் சாத்தக் கூடாது. ரங்கூன் டீக்; வெலை ஜாஸ்தி, செவத்திலே ஆணி அடிக்கக்கூடாது. மூட்டைப் பூச்சியை நசுக்கக்கூடாது. தோட்டத்திலே கீரை கொத்தமல்லி பயிரிடக்கூடாது. அந்த வேருங்க அஸ்திவாரத்துலே போச்சுன்னா கட்டடம் 'கிராக்' விட்டுப்போவும். குழாயிலே தண்ணிவல்லேன்னா கெணத்துலே தான் சேத்திக்கணும். தண்ணி கல்கண்டு மாதிரி இருக்கும். ஆமாம்; எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டேன். முக்கியமா ரெண்டாந் தேதிக்குள்ளே வாடகை கரெட்டா வந்துடணுங்க!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/64&oldid=1479446" இலிருந்து மீள்விக்கப்பட்டது