பக்கம்:கேரக்டர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'ஏமாளி' ஏகாம்பரம்

"ஏய் ஏகாம்பரம்! நாளைக்கு மார்னிங் மெட்ராஸுக்குப் புறப்படணும். மறந்துடப் போறே! ஓட்டல் ஏஷியாடிக்கிவே ரூம் புக் செஞ்சுக்கலாம். ஒரு வாரத்துக்குள்ளே மாம்பலத்திலே ஒரு தனி பங்களா பிடிச்சு போர்டை மாட்டிடுவோம். என்னடா முழிக்கிறே? பழி!" இது ஏகாம்பரத்தின் நண்பன் மயில்சாமி.

"எனக்கென்னமோ பயமாயிருக்குடா. சினிமா பிஸினஸ் எனக்குப் பழக்கமில்லையேன்னு யோசிக்கிறேன்" என்றான் ஏகாம்பரம்.

"அதுக்குத்தான் நான் இருக்கேனேடா! உனக்கென்ன பயம்? தைரியமாப் புறப்பட்டு வாடா..."

"பணத்துக்கு என்னடா செய்யறது?"

"மெட்ராஸிலே லாரி விற்ற பணம் முப்பதாயிரம் வரணும்னு சொன்னயே. அதை வசூல் செஞ்சுக்கறது. உன் பெரியப்பா கிட்டேயிருந்து இப்போதைக்கு ஓர் இரண்டாயிரம் வாங்கிக்கோ. மெட்ராசுக்குப் போனதும் லாரிப் பணத்தை வசூல் செய்துக்குவோம். ஒரு படத்துக்குப் பூஜையைப் போட்டு,ஆறாயிரம் அடிவரைக்கும் எடுத்துட்டா அப்புறம் நாலு டிஸ்ட்ரிபியூடர்களைப் பிடிச்சுப் பணம் பண்ணிடலாம்டா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/65&oldid=1479447" இலிருந்து மீள்விக்கப்பட்டது