பக்கம்:கேரக்டர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

"ஏண்டா,முப்பதாயிரம் போதுமாடா?"

"அடேயப்பா! அதை வெச்சுக்கிட்டு அசுவமேத யாகமே செய்யலாம். மெட்ராஸிலே படம் எடுக்கிறவங்களெல்லாம் முதல் வெச்சுகிட்டா ஆரம்பிக்கிறாங்க? எல்லாம் வெறுங்கையை முழம் போடறவங்கதாண்டா அதிகம்!"

"ஏண்டா! போடற பணம் திரும்பி வருமான்னு பயமாயிருக்குடா!"

"நீ ஒரு பத்தாம் பசலிடா! கவலைப்படாதே! பிலிம் பிஸினெஸ்லேதாண்டா லாபமே அதிகம்!"

"நல்ல கதையா வேணுமே?"

"ஸ்டோரிக்கு என்னடா பஞ்சம்! தஞ்சாவூர் நஞ்சுண்டா ராவ் இல்லே? அதாண்டா டி.என். ராவ்! அவன்கிட்டே அரை டஜன் ஸ்டோரி இருக்குது. அவனுக்கு இருபத்தைந்து ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தா அரை டஜனையும் நம்கிட்டே கொடுத்துடுவான். நல்லதா ஒண்ணு செலக்ட் பண்ணிக்கிட்டாப் போச்சு!"

"சே பாவம்!எழுத்தாளர்களை ஏமாத்தக்கூடாதுடா!"

"சரி; அப்ப அட்வான்ஸை அம்பதாக் கொடு."

"ஹீரோயின் யாரு?"

"அவதாண்டா, மிஸ் ஹேமலதா. அவளை நீ பார்த்ததில்லையே...?

"அது யாருடா ஹேமலதா? பேரையே கேள்விப்பட்டதில்லையே!"

"பெரிய ஸ்டாருடா. கண்ணம்மா பேட்டையிலேதான் இருக்கா. ரெண்டு மூணு படத்திலே குரூப் டான்ஸிலே வத்திருக்கா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/66&oldid=1479449" இலிருந்து மீள்விக்கப்பட்டது