பக்கம்:கேரக்டர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஆகட்டும் பார்க்கலாம். இப்ப நான் அவசரமா சினிமாவுக்குப் போயிண்டிருக்கேன். நாளைக்கு ஆபீஸ்பக்கம் வாயேன்; சாவகாசமாகப் பேசலாம்..." என்று தட்டிக் கழித்தேன்.

"நாளைக்கா? எந்த ஆபீசுடா உனக்கு?" என்று கேட்டான்.

"நான் இப்போ ஆடிட்டரா இருக்கேன். ஆபீஸ் ஆர்மீனியன் ஸ்ட்ரீட்லே" என்று கூறி விலாசத்தைச் சொல்லி விட்டு அந்த விடாக்கண்டனிடமிருந்து ஒரு வழியாகத் தப்பினேன்.

அவன் அப்பால் போனதும் என் மனைவி, "யார் இந்தப் பைத்தியம்? நாகரிகமில்லாமல் நடுத்தெருவிலே நிற்க வைத்துக்கொண்டு..." என்றாள்.

"என் கிளாஸ்மேட்! அவன் ஒரு டைப். ஆனால் கவடு சூது கிடையாது. எதையும் ஸ்டெடியாச் செய்யமாட்டான். ஒரு நாள் இன்ஷூரென்ஸ் ஏஜண்டுன்னுவான்; இன்னொரு நாளைக்கு டூரிங் சினிமா மானேஜர் என்பான். ஒரு நாளைக்குக் காரிலேயே பறப்பான். இன்னொரு நாளைக்கு நடந்தே சுற்றுவான் ஒரு நாளைக்கு இங்கிலீஷிலேயே பிளந்து கட்டுவான். இன்னொரு நாள் இந்தியிவே வெளுத்துக் கட்டுவான். ஒரு நாள் குபேரன்! மறுநாள் அன்னக்காவடி. எதுவும் நிலை இல்லே" என்றேன்.

ஆறு மாதம் கழித்து மீண்டும் அவனைச் சந்தித்தேன், கூலிங் கிளாஸ். ஸில்க்ஜிப்பா. கையிலே ஒரு லெதர் பை. மூக்கின் கீழ் வண்டு போன்ற துண்டு மீசை; இம்மாதிரி அலங்காரங்களுடன் டாக்சியில் போய்க்கொண்டிருந்தான். என்னைக் கண்டுவிட்டு டாக்சியை நிறுத்திக் கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு, "ஹல்லோ சந்தர்!" என்று கத்திக் கொண்டே ஓடிவந்தான்.

'சரிதான் பத்தாயிரத்துக்கு ஒரு பாலிஸி எடுத்துக் கொண்டுவிட வேண்டியதுதான். காலைச் சுற்றிய பாம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/92&oldid=1479784" இலிருந்து மீள்விக்கப்பட்டது