பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

அவ்வளவுதான் சன்னியாசி பூனைக்குட்டி வளர்த்த கதைதான். சிறுகச் சிறுக விட்டுக் கொடுத்துண்டே போய் நானே எனக்கு காணாமல் போய் விடுவேன். இதுதான் நேரப் போகிறது. ஆனால், எனக்கு அசதி கண்டுடுத்து. அம்மா போனது போக, மிச்சத்தை முழுக்கவும் நான் இழக் காமல், எவ்வளவு சீக்கிரம் என்னை உன்னிடம் அழைச்சுக் கறையேர், உனக்குப் புண்ணியம். இதுக்கு மேல் சொல்ல எனக்கு என்ன இருக்கு?

கண் அயர்ந்தது.

தைபிறந்தால் வழிபிறக்கும்,

மதுரம்! மதுரம் வாயேன்! அட வரையா?

உன் வருகைக்கு இப்படித் தானே காத்திருப்பேன்!

உன் வருகையின் அடையாளம் கதவு மெல்ல கிறீச்செல்லமா, மெதுவா, திருட்டுத்தனமா கேக்கறது. மதுரம், வரையா?

சில சமயங்கள், காத்திருந்து காத்திருந்து கண் அசந்துடு வேன். நீ வந்தது, உள்ளே வந்து விட்டது தெரியாது மார் மேல் மெத்தென உன் உடல் அமுங்குகிறது.

-இறுக அணைத்துக் கொண்டார். கழுத்தைச் சுற்றி கைகள் பின்னின.

நான் சொர்க்கத்துக்குப் போயிண்டிருக்கேன். மதுரம், உனக்கு இன்னும், இந்த ஆர்வம் கூந்தல் சரிந்து அடையாக முகம் மேல் விழுந்தது. மார் மேல் மார்புகள் அழுந்திக் குழைந்தன. அதரத்தை அதரம் தேடிற்று. மதுரம் ஒ மதுரம்!!

ஆமா, மதுரம் இங்கே எப்படி வந்தாள்? எப்படி வர முடியும் கனவு கண்டுண்டிருக்கேனா? அந்தக் கேள்வியி