பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ராrஸ்மாய், பயங்கரத்தின் கம்பீரத்தில் மரங்களின், கிளைகளின், இலைகளின் பின்னணியில் கின்றபடி அத்துடன் ஒரு குட்டி மேகம், ஆயுதம் போல் தான்ே நகர்ந்து அதன் கையில் ஒட்டிக் கொள்கிறது.

வா போகலாம் என விளிக்கிறது.

பகவானே, என் செய்வேன்? கைகள் பிசைந்து கொள் கின்றன.

கற்பனைக்கிடங்கொடேல். உள்ளதும் உள்ளதற்குப் பெரிசாக உருக்காட்டிப் பயமுறுத்தும் மறதியை வெற்றி யுடன் பயிர் செய்ய மனதைக் கல்லாக்கிக் கொள்ளணும். அக்த சக்தி என்னிடமில்லையே! சரியாகக் கரையாமல் கட்டியுமுட்டியுமாய்க் கஞ்சிமாவாய் ஆகிவிட்டேனே!

மதுரம் புக்ககத்துக்க வந்த புதிது. கூட்டுத்தனமா யிருந்த நாள். வீடு ஒரே ஸல்லோ புல்லோ-இன்னும் சாந்தி கழிக்கவில்லை. நாள் இன்னும் பொருந்தவில்லையாம். 'எல்லாம் நல்லத்துக்குத்தான், நெடுங்காலத்துக்குத்தான் சொல்றோம். பொறுக்கலாம், பொறுக்கணும்' அதென்ன பாஷையோ? இவர்கள் வார்த்தைக்கு யார் எதிர்ப்பு சொன்னது? எங்கே தைரியம் இருக்கிறது? இருந்தால் அந்தத் தோரணையில்தான் பெரியவர்களுக்கு அவர்கள் வயதின் அதிகாரம் வந்தவா போனவர் எல்லாம் அவர்கள் பேருக்கு ஆளுக்கு ஒரு அடி அடித்து விட்டும் போகனும்! ‘என்னவோ அப்பா கான் சொல்றதைச் சொல்லிட்டேன். கையைக் கோத்துண்டு போகணும்னா கையைக் குவித் துண்டு போவதோடு, கின்னால்சரி” இது இன்னொரு பாணி பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு கனியக் காத்திரு என்பது அது அந்த நாளை விக்ரமாதித்த சோதனைகளில் ஒன்று.