பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

5

நாசத்துக்கே வசிய சக்தி இருக்கிறது.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் பல்லி வேட்டை எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்!

பாச்சை, ஈசல், தத்துக்கிளி பறந்து பறந்து, தத்தித் தத்தி பல்லியின் அசைவற்ற உடலைத்தான் சுற்றிச்சுற்றி வருகின்றன. வேறெங்கேனும் தொலையக் கூடாதா? எத்தனையோ முறை விரட்டியும் பார்த்தாச்சு. அந்தக் கொட்டாத கண்களுக்கு என்னதான் வசிய சக்தியோ? அங்கேயே தான் அதன் வாயருகேதான்

‘லபக் ஒன்றன் விதி க்ளோஸ். அடுத்ததின் முறை வந்தாச்சு. அது போல் இருக்கிறது என் கதி.

உனக்கு இவ்வளவு ஞானபூர்வமாக எல்லாம் தெரிந்திருந்தால் போவானேன்? மதுரம் எக்கேடு கெட்டுப் போகட்டும்.

அந்த அளவுக்கு என்னிடம் பக்குவம் இல்லையே! பாசக்கயிறுதான் மேலே விழுந்தாச்சே!

எப்பவோ ஒரு சேதி படித்தேன். எங்கேயோ- வட நாட்டில்-ஒரு சிலந்தி தன் நூலால் பாம்பையே கட்டி விட்டதாம். இசைகேடாக நேர்ந்து விட்ட சமாச்சாரம். நாள் கணக்கில் போராட்டம். வீட்டுக்காரன் இயற்கையின் வியதியைத் தடுக்க மறுத்து விட்டான். பிறரையும் நுழைய விடவில்லை. பாம்பு தன் பிணைகளில் நெளிகிறது. நூல் அற அற, மேலே மேலே புதுக்கட்டுக்கள் அதன் மேல் விழுந்து கொண்டே இருக்கின்றன.

குளிர்ந்த வாடை போல் உர்ஸ் உள்ளே நுழைந்தாள்...

உர்ஸ்தானா? இதுமாதிரி உர்ஸைப் பார்த்ததே எனக்கு மறந்து போச்சு.