பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

'செங்கற்பட்டு: செங்கல்பட்டு!!' ப்ளாட்பாரத்தில் போர்ட்டர்களின் அறை கூவலில் விழித்துக் கொண்டேன். பொல பொலவென பொழுது புலர்ந்திருந்தது.

அப்புறம் தூக்கம் வரவில்லை. ஜன்னலுக்கு வெளியே வண்டியின் இரு மருங்கிலும் பணி நீலம் அடர்ந்து குமைந்து புகைந்து புழுங்கிற்று.

சூரியன் உதித்தபின்னரும் ஆங்காங்கே புல்தரைகளில், குளம் குட்டை ஏரிஜலம் விளிம்பில் குன்றுகளின் சரிவில் தொங்கும் மூடுபனித்திட்டுகளினூடே வெய்யிலின் கிரணங் கள் துாலங்கட்டி வான மாளிகையை ஒளித் தூண்களால் தாங்கும் விந்தையை நான் கண் கொட்டா வியப்பில் அதிசயித்துக் கொண்டிருக்கையிலேயே வண்டித் தொடர் அவுட்டரைத் தாண்டி லயன் மாறி கம்பீரமான கிழட்டு நடையில் மூன்றாவது ப்ளாட்டாரத்துள் நுழைந்து கொண் டிருந்தது.

எந்த ரயில்வே ஸ்டேஷனிலும்-அதிலும் எழும்பூரில் கேட்கவே வேண்டாம்-ஒரு வண்டி புறப்படுமுன்னோ அல்ல வந்து அடைந்த உடனோ காணும் அந்த முகூர்த்தப் பரபரப்பை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதிலேயே ஒரு அலாதிப் பரபரப்பு.

-கூட்டிலிருந்து விழுந்துவிட்ட குருவிக் குஞ்சை எடுத் துக் கொண்டாற் போல உள்ளங்கை மேல் உள்ளங்கை பொத்தி, தன்னுள் தன்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டு: வழி தப்பி விட்டாற்போல் லேசான திக்ப்ரமையில் வண்டித் தொடரின் வேகத்துக்கு ஏற்ப எங்களைத் தேடும் பிரயாசையில் அப்படியும் இப்படியுமாகத் தலையசைப் புடன்