பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேரளத்தில் எங்கோ...

விடிவேளையின் சில் காற்று அந்தப் பள்ளத்தாக்கில் அலைகையில், திரைச் சீலையில் தீட்டிய ஓவியம் பெருமூச் செறிவது போன்றிருந்தது. கமுகும், தென்னையும், பலாவும் அடர்ந்த அணைப்புள் என்குடிசை, செல்லத் தங்கை போல் ஒடுங்கியிருக்கிறது. காற்புறமும் குன்றுகள் கோட்டை போல் சட்டென்று கண்ணுக்குப் படாமல் அதைக் காக்கின்றன. தங்க முகில் ஒன்று, கம்பீரமாய், பெரிய பட்சிபோல் மேலே தவழ்கிறது. இது சொர்க்கம். உயிரே போ' என்று சொல்லி, சொன்ன சொல் கேட்டு உயிர் போவதாக இருந்தால், குளுகுளுவென்று ஏதேனும் ஒரு மரத்தடியில் படுத்து உயிரை விடுவதற்கு இந்தச் சிமையைவிட உகந்த இடம் இருக்காது. அமைதியின் உச்சக் கட்டமே என் உயிர் என் கட்டில் இருத்தல்தானே! யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சித் தேடும் பொய்மை நிலை எஸ்கேபிஸம் என்கிறார்கள். எஸ்கே பிஸ்த்தில்தான் இங்கு வந்தேன். வந்த இடத்தில் அதையே யதார்த்த சித்திகண்டபின், வேண்டுவதற்கே வேறு இல்லை. முழுமறதி எனக்குச் சாத்தியமில்லை. எனக்கே நெஞ்சிலே வைத்துப் புழுங்கும் சுபாவம். அம்மா என்னை ஒரு முறை கார்க்கோடகன்' என்றிருக்கிறாள்.

இங்கு என்றுமே தாங்க முடியாத வெய்யிலோ, புழுக்கமோ இருந்ததில்லை. இருக்கபோவ்துமில்லை.