பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ፇ2

சமையலறையிலிருந்து மதுரத்தின் குரல். "குளிக்கறவா குளிச்சுட்டு வந்தால் சாப்பாடு ரெடி'

10

மாலை மஞ்சள் வெய்யிலின் கதகதப்பில், பால்கனி யில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறேன்.

உர்ஸைக் கொத்திக் கொண்டு பிள்ளைகள் ஷாப்பிங் போய்விட்டார்கள். ஒத்தாசைக்கு லூலு கூட...

எங்கேயோ ஆலயமணி...

அவசரமாக மதுரம் உள்ளிருந்து வந்து பால்கனியில் எனக்கும் கைப்பிடிச் சுவருக்கும் இடையிடுக்கில் நுழைந்து மணியோசை திக்கைப்பார்த்து மற்ற கட்டிடங்களின் மாடி கள் ஆலய கோபுரத்தை மறைத்துவிட்டன-ஒரு கைவிரல் நுனிகளால் கன்னங்களில் மாறி மாறிப் போட்டுக் கொள் கிறாள்.

'மதுரம், லூலூன்னா என்ன பெயர்?"

புன்னகை பூத்தாள். நானும் முதலில் திணறித்தான் போனேன். வெச்சபேர் லலிதா. லலியாக் குறுகி அப்புறம் லல்லி லில்லி, அப்புறம் லூலூ சூரபத்மன் தலை மாதிரி' வாய்விட்டுச் சிரித்தாள். அப்பாவின் பதவி உயர்வுக்கு எத்தபடி புழக்க வட்டம் மாற மாற பேச்சு, உடை பேர் திரியக் கேட்பானேன்? ஸ்லாக்கும், ஜீன்ஸும் உடுத்துண்டு என் பேர் லலிதான்னா என்ன பொருத்தம் இருக்கு. நானே கேட்கறேன்: லூலு இது எப்படியிருக்கு? பேரில் என்ன இருக்கு எதில்தான் என்ன இருக்கு?, எனக்குத் தலை சுத்தறது