பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கிறதா? சமுதாயத்தின் விளைவு காம், சமுதாயத்தில் வாழ்கிறோம். தொடர்ந்து வாழ்கிறோம். ஆகையால் அதன் விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்குச் சேர வேண்டிய கப்பத்தை செலுத்தித்தான் ஆக வேண்டும். இல்லாவிடில் அது உன்னைச் சிலுவையில் அறைந்துவிடும். ப்ரபு, உன் பாடங்களை இந்த ஐந்து வருடங்களில் கற்றுக்கொண்டிருப்பாய் என்று கினைத் தேன். ஆனால், நீ கொஞ்சம்கூட மாறவில்லை. ஏன்? யாருமே திருந்தவில்லை.'

"அப்போ, அஞ்ஞாதவாசத்தில் திடீரென்று மறைக் தீர்களே, நீங்கள் மாறியிருக்கிறீர்களா? திருந்தியிருக்கிறீர் களா? என்று பிள்ளை அப்பனைக் கேட்டால் மரியாதைக் குறைவு. அப்பன் பிள்ளையைக் கேட்டால் புத்திமதி. இதுவே ஒரு பங்கீடு. சமுதாயத்தின் பங்கீடு அல்லவா? காங்கள் திருந்த வேண்டும் என்கிற எண்ணத்திலா எங் களை விட்டுப் போ னிர்கள்?"

'உங்கள் நடைமுறை, வீட்டுக்குள்ளேயே அட்டஹாஸம், போக்கின் வேதனை பொறுக்க முடியாமல் ஒடிப்போனேன் என்றே சொல்கிறேன். நீங்களே உங்கள் நிலைமையுணர்ந்து திருத்திக் கொள்வீர்கள் என்று கினைத் தேன். நான் எதைச் சொன்னாலும் உங்களுக்கு மூக்கணாங்கயிறாயிருக்கிறதே!'

ஆமாம், திருந்துவதென்றால் காங்கள் உங்கள் வழிக்கு வந்துவிட வேண்டும் அதானே!"

"அப்படி என்ன அப்பா, நாங்கள் காட்டும் வழி அவ் வளவு பொல்லாதவழி?’’

"ட்ராக்கை மாற்றாதேயுங்கள் அப்பா அப்போ எங்களுக்கு எங்கள் வழியென்று கிடையாதா? முள்ளும்