பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恩黎

புதரும் ஆனாலும்; நீங்கள் வகுத்தது. அது ஒத்தையடிய பாதையோ, ராஜ பாட்டையோ, அதுதானா எங்கள் விதி: அப்பா, உலகம் ஏற்கெனவே போட்டிருக்கும் ராஜ பாட்டையை மீதிப்பவர்களுக்கு அல்ல. கல்லும், மண்ணும், பள்ளங்களும், பறிக்காத குழிகளும் பறித்த குழிகளும்...' என் தலையை இறுகப் பிடித்துக் கொண்டேன். இவன் என்ன உளறிக் கொண்டே போகிறான்? உருவக பாஷை யில் ஊரை ஏமாற்றிக் கொண்டு, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு- இது தான் ப்ரபு. உழைப்புக்கு உடம்பு வணங் காமல், வெட்டிப் பேச்சே பிழைப்பு என்ற சித்தாந்தத்துக்கு வந்து விட்ட ப்ரபு. வாயில் வந்ததெல்லாம் இவர்களுக்கு பொன்னான வார்த்தை; மூதாதையர்களும் முன்னோடி களும் இவாகளுக்கு மடையர்கள். இவர்கள்தான் புது ஞான ஜோதிகள்.

கான் பேசவில்லை. தட்டாமாலைத் தாமரைப்பூ, சுத்திச் சுண்ணாம்பு வந்தாச்சு. என் மானம், கெளரவம், உறவு, எல்லாமே ப்ளாட் பாரத்துக்கு.

'அப்பா இப்படியெல்லாம் எனக்குத் தோணுவதே உங்களுக்குப் பிடிக்க வில்லை, எனக்குத் தெரியும். இத்தனை நேரம் நாம் பேசினது அத்தனையும் பழைய பாடம், அலுத்துப் போன பாடம், உளுத்துப் போன லெக்சர், லெக்சர், லெக்சர் என்னைச் சொல்கிறீர்கள். நீங்களும் அதே, அப்போ போட்ட கிராமப்போன் பிளேட்டைத் தான் வாசிக்கிறீர்கள். அப்பா. கர்ன் சினைக்கி றேன், இல்லை எனக்கு அப்படித் தோணறது. நாம்இல்லை மனிதன், சொன்னதையே சொல்லி, எண்ணி எண்ணி, மிதித்ததையே மிதித்துக் கொண்டு, தன்பாதத் தையே பள்ளமாக்கிக் கொண்டு, அந்தப் பள்ளத்தினுள் ளேயே சுற்றிச் சுற்றிக் கொண்டு வரும் நிலைமாற