பக்கம்:கேள்வி நேரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


திலக: சரியாகச் சொன்னாய். கா. நமச்சிவாய முதலியார் பெரிய தமிழறிஞர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். தமிழ்ப் புலவர்களுக்கு மிகவும் ஆதரவு தந்தவர். முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களை எழுதினார். அந்தப் பாடப் புத்தகங்களில் உள்ள ஒரு பாட்டுத்தான் சின்னச் சின்ன எறும்பே' என்ற பாட்டு. சரி, கடைசியாக ஒரு கேள்வி. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அந்த வீட்டுத் தாத்தா அங்கிருந்த ஒரு புலித்தோலைக் காட்டி, என் முன்னோர்களில் ஒருவர் வேட்டையாடுவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். அவர் 600 வருஷங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புலியின் தோல்தான் இது!’ என்றார். என்னால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா?

கவிதா: எனக்குத் தெரியும். அந்தப் புலித் தோலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த ஒட்டை இருந்திருக்காது.

அமுதா : 600 வருஷத்துக்கு முன்னாலே நம் நாட்டுக்காரர்களுக்குத் துப்பாக்கியால் சுடவா தெரிந்திருக்கும்?

திலக : அதெல்லாம் காரணம் இல்லை. நானே சொல்லிவிடுகிறேன். வேட்டைத் துப்பாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/73&oldid=484655" இலிருந்து மீள்விக்கப்பட்டது