பக்கம்:கேள்வி நேரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


தேனி முருகேசன்: என் அரசியல் வாரிசு' என்று மகாத்மா காந்தி ஒருவரைப் பற்றிச் சொன்னார். அந்த ஒருவர் யார்?

சசிகலா: நேரு மாமாதான்.

தேனி : பேஷ்! என் முதல் கேள்விக்கே சரியான விடை கிடைத்துவிட்டது சரி, இராமேஸ்வரத்திலுள்ள சுவாமி பெயர் இராமலிங்கம். இராமநாத சுவாமி என்றும் சொல்கிறார்கள். அம்மன் பெயர் தெரியுமா?

கார்த்திகேயன் : பர்வதவர்த்தினி.

தேனி: சரியாகச் சொன்னாய். கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) என்ற கதையை எழுதியவர் யார் ?

லிங்கராஜ்: எச். கிருஷ்ணமூர்த்தி.

கார்த்தி: ஐயையோ! அந்தக் கிருஷ்ணமூர்த்தி . கோகுலம் இதழில் உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகளைத் தமிழிலே சுருக்கித் தருபவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/76&oldid=484657" இலிருந்து மீள்விக்கப்பட்டது