பக்கம்:கேள்வி நேரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


அலமேலு : கோனார் உரைநூல் என்றால் உங்களுக்கு நன்றாகத் தெரியும். கோனார் என்கிறார்களே, அவருடைய முழுப் பெயர் தெரியுமா ?

சரவணன்: தெரியும் அக்கா. ஐயன் பெருமாள் கோனார்

அலமேலு: சரியான விடை. அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார், இப் போது இங்கிலீஷிற்குக்கூட, கோனார் நோட்ஸ்' இருக்கிறதா என்று சில மாணவர்கள் கேட்கிறார்கள்! அந்த அளவுக்கு அவர் பெயர் பிரபலமாகியிருக்கிறது!... மகாத்மா காந்தி நடத்திய பத்திரிகைகளின் பெயர்களைக் கூற முடியுமா ?

கிரிசங்கர்: ஹரிஜன் பத்திரிகை

அலமேலு : உம்... இன்னும் சில பத்திரிகைகளையும் அவர் ஆசிரியராயிருந்து நடத்தியிருக்கிறாரே !

சரவணன்: யங் இந்தியா'... நவஜீவன்'.

அலமேலு: சரி... இந்தியாவில் அவர் நடத்திய மூன்று பத்திரிகைப் பெயர்களையும் கிரியும் சரவணனும் சேர்ந்து கூறி விட்டார்கள். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அவர் இருந்த போது, ’இந்தியன் ஒப்பீனியன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/86&oldid=484666" இலிருந்து மீள்விக்கப்பட்டது