பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

ஐங்குறு நூறு யா. சு. சே. மா. சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாகையால், அந்நூலில் கூறப்படுகிற ஆதன் அவினி, இவ்வரசன் காலத்திலோ அல்லது இவனுக்கு முன்போ இருந்தவனாதல் வேண்டும்.

 

யாதன் வாழியவினி, வேந்துபகை தணிக யாண்டுபல தந்துக." “வாழியாதன், வாழியவினி யரசுமுறை செய்க கலவில்லாகுக.” “வாழியாதன் வாழியவினி. நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக.” “வாழியாதன் வாழியவினி, மாரி வாய்க்க வள நனி சிறக்க” இவ்வாறு இவன் பத்துச் செய்யுட்களிலும் வாழ்த்தப்படுகிறான். இதன் பழைய உரை, “ஆதனவினி யென்பான் சேரமான்களிற் பாட்டுடைத் தலைமகன்” என்று கூறுகிறது.