பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157


பயிர்த் தொழில் கைத்தொழில் வாணிபம்

மற்றத் தமிழ் நாடுகளில் இருந்தது போலவே கொங்கு நாட்டிலும் பலவகையான தொழில்கள் நடந்து வந்தன. கொங்குநாடு கடற்கரை இல்லாத உள்நாடு. ஆகையால் கடல்படு பொருள்களாகிய உப்பும் உப்பிட்டு உலர்த்திய மீன்களும் சங்குகளும் நெய்தல் நிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. அவை மேற்குக் கடற்கரை கிழக்குக் கடற் கரைப் பக்கங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன, உமணர் (உப்பு வாணிகர்) உப்பு மூட்டைகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு உள் நாடுகளில் வந்து விற்றனர். கொங்கு நாட்டில் வாழ்ந்தவரான ஔவையாரும் இதைக் கூறுகிறார். ('உமணர் ஒழுகைத்தோடு') (குறும்-388:4) உப்பு வண்டி மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஓசை காட்டு வழிகளில் ஒலித்தது. உப்பு வண்டிகளில் பாரம் அதிகமாக இருந்தபடியால், சில சமயங்களில் வண்டிகள் மேடு பள்ளங் களில் ஏறி இறங்கும்போது அச்சு முறிந்து விடுவதும் உண்டி. அதற்காக அவர்கள் சேம அச்சுகளை வைத்திருந்தார்கள்.[1]


  1. * 'உமணர், கண நிரை மணியின் ஆர்க்கும்' (அகம் 303:17-18) 'எருதே இளைய நுகமுணராவே, சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே, அவல் இழியினும் மிசை ஏறினும் அவணதறியுநர் யாரென உமணர், கீழ்மரத் தியாத்த சேமவச்சு' (புறம்-102:1-5)