பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

பொன்னை (பொன், வெள்ளிக் காசுகளை)க் கொடுத்துவிட்டுச் சென்றது கூறப்படுகிறது.

உரோமாபுரியிலிந்த பிளைனி (Pliny) என்னும் அறிஞர் கி.பி. 70-ஆம் ஆண்டில் ரோமாபுரிச் செல்வம் கிழக்கு நாடுகளுக்குப் போவதைக் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் நூறாயிரம் ஸெஸ்டர் (1100000 பவுன்) மதிப்புள்ள பொன்னும் வெள்ளியும் வாணிகத்தின் பொருட்டுக் கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுவதை அவர் கண்டித்திருக்கிறார். உரோம நாட்டுச் சீமான்களும் சீமாட்டிகளும் வாசனைப் பொருள்கள் நகைகள் முதலியவைக்காக உரோமநாட்டுப் பொன்னை விரயஞ் செய்ததாக அவர் கூறியுள்ளார். சங்கப் புலவர்கள், யவனவாணிகர் பொன்னைக் கொண்டு வந்து கொடுத்துப் பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள் என்று கூறியது போலவே பிளைனியும் உரோமாபுரிப்பொன் கிழக்கு நாடுகளுக்குப் போய் விடுகிறது என்று கூறியிருப்பது காண்க.

உரோமாபுரிச் சாம்ராச்சியத்தில் அக்காலத்தில் ஸ்பெய்ன் தேசமும் அடங்கியிருந்தது. அந்த ஸ்பெய்ன் தேசத்தில் தங்கச் சுரங்கம் இருந்தபடியால், அங்கிருந்து உரோமாபுரிச் சக்கரவர்த்திகளுக்கு ஏராளமாகப் பொன் கிடைத்தது. அகஸ்தஸ் சக்கரவர்த்தி இந்த பொன்னைக் கொண்டு நாணயங்கள் அடித்து வெளிப்படுத்தினார். அந்த நாணயங் களைக் கொண்டு வந்த யவன மாலுமிகள், அதிக சரக்குகளை (முக்கியமாக மிளகை) ஏற்றிக் கொண்டு போவதற்காகப் பெரிய மரக்கலங்களைக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடைப்பெற்ற யவன தமிழ வாணிகத்தினால் கொங்கு நாடு கதிர் மணிகளை யவன நாட்டுக்கு விற்றுப் பெரும் பொருள்