பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

திரைப் பொறிக்கப்பட்டதும், ஜர்மனிகஸின் மனைவியான அக்ரிப்பைனாவின் உருவ முத்திரை பொறிக்கப்பட்டதுமான காசுகளும் கிடைத்திருக்கின்றன.[1]

தமிழ்நாட்டுக்கு வந்து பொருள்களை வாங்கிக் கொண்டு போன யவனக் கப்பல் வியாபாரிகள் காசுகளைக் கொடுத்தே பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள். இந்தச் செய்தியைச் சங்க செய்யுட்கள் கூறுகின்றன. அக்காலத்திலிருந்து பிளைனி (Pliny) என்னும் உரோமாபுரி அறிஞரும் இதைக் கூறியுள்ளார். பரணர், தாம்பாடிய புறம் 343-ம் செய்யுளில், “மனைக் குவைஇய கறிமூடையாற், கலிச்சும் மைய கரை கலக் குறுந்து, கலந்தந்த பொற் பரிசம், கழித் தோணியாற் கரை சேர்க்குந்து,” என்று கூறுகிறார். (புறம். 343)

சேர நாட்டு முசிறித் துறைமுகத்தில் யவனக் கலங்கள் (மரக்கலங்கள்) பொற்காசுகளைக் கொண்டு வந்து நின்ற போது, தோணிகளில் கறி (மிளகு) மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போய் யவன மரக் கலங்களில் இறக்கி விட்டு அதற்கு விலையாக அவர்கள் கொடுத்த பொற் காசுகளைத் தோணிகளில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்பது இதன் பொருள்.

புலவர் தாயங் கண்ணணாரும் இதைக் கூறுகிறார். “சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யாவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும், வளங்கெழு முசிறி.” (அகம் 149.7-11) இதில், யவனருடைய மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்துக்கு வந்து கறியை (மிளகை) ஏற்றிக் கொண்டு


  1. (M.J.L.S. Vol. xiii., Roman Coins found in India, J.R . A.S. xxiii.. J.B.B.R.A.S.I. (1843.)P.294 Num. chrn. 1891, Roman History from Coins. Michael Grant. 1968.)